டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டெல்லியில் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் முடியப்போவதால், அங்கு பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவித்த நாள் முதலே டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் […]
