புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் 5 மணிநேரம் தடைபட்டது. புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனம் குருமாம்பட்டில் இயங்கிவருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். நாளொன்றுக்கு காலையில் 60 ஆயிரம் லிட்டர் பாலும் மாலையில் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து புதுச்சேரி முழுவதும் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதுமட்டுமல்லாது ஐஸ்கிரீம், நெய், பன்னீர் போன்ற […]
