கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. […]
