மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை என்றும், தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்தினார்கள் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரு தெருவாக காலி குடங்களுடன் தண்ணீருக்காக தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழக அரசு அனைத்து மாவட்டத்தின் தலை […]
