சிற்பக் கலைக் கல்லூரி மாணவர் பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டு போடும் முறையை வடிவமைத்து முதல் பரிசை பெற்றுள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நுண்கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாக்காளர்கள் எளிதில் புரிந்து கொள்கின்ற வகையில் விழிப்புணர்வு மாதிரி சிற்பங்களை வடிவமைக்கும் போட்டியானது நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்கள் […]
