திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், […]
