தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள், பீர்க்கன்காரணையில் நேற்று ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமான பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ் குமார் மற்றும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய மோட்டார் வாகன சட்டம் 2012ன் விதி படி வாகனத்தில் முதல் […]
