Categories
தேசிய செய்திகள்

Time Pass-க்கு ஜெயிலுக்கு போகலாம்…. ஒரு அரிய வாய்ப்பு…. எப்படி தெரியுமா….?

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஒருமுறை சிறைக்கு சென்று விட்டாலே அது அவர்கள் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக தான் இருக்கிறது. ஆனால் சிலருக்கு சிறைச்சாலையில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் சிறைச்சாலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அத்தகைய ஆர்வலர்களுக்காக உத்தரகாண்டில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய வைரஸால் கடும் கட்டுபாடுகள்… அரசையே ஏமாற்றிய பெண்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

போலி சுகாதார பாஸ் வழங்கிய பெண் ஒருவருக்கு பிரான்சில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உருமாறிய பீட்டா வகை வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பாஸ் இல்லாதவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 200 பேருக்கு போலி சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், Seine-Saint-Denis என்ற மாவட்டத்தில் பெண் ஒருவர் போலி சுகாதார பாஸ் வழங்கிய வழக்கில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

பறக்கும் விமானத்தில்… 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய கோடீஸ்வரர்… சிறையிலிருந்து விடுவிக்க கோரிக்கை..!!

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் கொரோனா அச்சத்தால் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஸ்டீபன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அச்சிறுமியிடம் 2 முறை தவறாக நடந்துள்ளார். அதேபோன்று 2019ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான தனி விமானம் ஒன்றில் சிறுமியை அழைத்துக் கொண்டு பயணித்த ஸ்டீபன் மீண்டும் அவரிடம் தவறாக நடந்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கேள்விகளால் துளைத்த சீமான் …!!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம்… “என்னை விடுவியுங்கள்”… பாடகரான பாலியல் குற்றவாளி வேண்டுகோள்!

வாஷிங்டனில் கொரோனாவால் அச்சமடைந்திருக்கும் 53 வயது பாடகர் ஆர் கெல்லி, பாலியல் குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்று என்ற தமக்கும் பரவி விடுமோ பயத்தால் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாலியல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட ஹாலிவுட் பாடகர் ஆர் கெல்லி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று குறிப்பாக வயது முதிர்ந்தவர்களை குறிவைத்து தாக்குவதுடன் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. தற்போது பாடகர் கெல்லி (53) மீது கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

சிறைச் சாலையிலேயே கையூட்டு, ஊழல்: சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் வேதனை

சிறைச்சாலைகளில் தொடர்ந்து நடக்கும் ஊழலைத் தடுத்து நிறுத்தக்கோரி அலுவலர்களுக்கு சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, அனைத்து சிறைத் துறை அலுவலர்களுக்கும் சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறைப் பணியாளர்கள், சிறைவாசிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பல்வேறு வசதிகளைச் செய்துதருவதாகத் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரவுடிகள் சிறையின் சுவரைத் தாண்டி தப்பித்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட உதவிபுரிவதாகவும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கியது ரூ.500: கிடைத்தது ஓராண்டு சிறை……!!

காவலரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பள கணக்கு அலுவலகக் கணக்காளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் செல்வம். இவர், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றைக் கேட்டு நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில் 2008ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், இந்தத் தொகையை அனுமதிக்க ஐந்தாயிரம் […]

Categories
உலக செய்திகள்

சிறைக்குள் மோதல் – 16 கைதிகள் பலி

மெக்சிகோவில் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் ஜகாடிகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டதாவும், ஆறு பேர் காயமடைந்ததாவுகம் சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “இன்று மாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு […]

Categories
உலக செய்திகள்

“ஹோண்டுராஸ் சிறையில் 18 கைதிகள் கொலை”… 16க்கும் மேற்பட்டோர் காயம்..!!

ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஹோண்டுராஸ் தீவில் சமீபத்தில் சிறை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கிடையில் மீண்டும் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஹோண்டுராஸ் நாட்டில் மொத்தம் 27 சிறைச்சாலைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் மொத்தம் 22 ஆயிரம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

சிறையிலிருந்து சொந்தப் பிணையில் வெளிவந்த நிர்மலா தேவி ….!!

மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலா தேவி சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக அக்கல்லூரியின் பேராசியை நிர்மலா தேவியை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை பெண்கள் தனி சிறையில் இருந்து விடுதலையான நிர்மலா தேவி இரண்டு வாய்தாவுக்கு செல்லாததால் மீண்டும் கைது செய்யப்பட்டு தனிசிறையில் நவம்பர் 25ஆம் தேதி அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நிர்மலா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வத்தலக்குண்டில் விடுதிகளில் முறைகேடாக தங்கியிருந்த 6 ஜோடிகள் கைது!

 வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கச்சியை ஏன் டா ஏமாத்துனா..!.. கத்தியுடன் மிரட்ட வந்த இளைஞர்கள் கைது….!!

 புழல் அருகே தங்கையை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கத்திமுனையில் மிரட்ட முயற்சித்த இரண்டு இளைஞர்களை புழல் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை செம்பியம் நெடுஞ்சாலையும் சூரப்பட்டு சாலையும் சந்திக்கும் அரசு மதுபானக் கடை அருகே புழல் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பெரம்பூரிலிருந்து செங்குன்றம் நோக்கி வந்த ஆட்டோவை மடக்கியபோது, அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனையடுத்து காவல் துறையினர் ஆட்டோவை துரத்தி சென்று பிடித்தனர். அப்போது காவல் துறையினரைக் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவர்களது தாய், தந்தை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரை தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 பெண்கொலை… 4 ஆயுள் தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

சென்னையில் பெண்ணையும்  3 பெண் குழந்தைகளையும் கொலை செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை முத்து தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சின்னராஜ் பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து சின்னராஜ் உடனான தொடர்பை உடனே துண்டித்தார் பாண்டியம்மாள். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நடுகடலில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!!

 ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  நடுக்கடலில்  இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்தனர் . துரைசிங்கம் என்பவருக்கு உரிமையான  படகில் நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட ஏழு பேர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டு  இருந்தனர்.அப்போது எதிர்பாரத விதமாக படகு எந்திரகோளாறு ஏற்பட்டு திசை மாறி செல்ல, அங்கு  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை  கடற்படையினர்  7 மீனவர்களையும் எல்லை தாண்டிமீன்பிடித்ததாக கூறி படகுடன் சிறைபிடித்தனர். பின்னர்  தலைமன்னார் கடற்படை  முகாமுக்கு கொண்டு செல்லபட்ட  […]

Categories

Tech |