Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு: ஏப்.7ம் தேதியில் இருந்து அமல்… பிரதமர் லீ ஹ்சியன் லூங்

சிங்கப்பூரில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி 1 மாத பணிநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு நன்றி

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பணவீக்கம் குறித்து மோடி பதிலளிக்க வேண்டும்- ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இலங்கை பிரதமர் ஆவாரா மகிந்த ராஜபக்சே?

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச 65% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே 65% வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை வென்றார். தேர்தலில் சஜித் பிரேமதாச 28% வாக்குகள் […]

Categories
உலக செய்திகள்

”வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்….!

திருக்குறள், மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. தாய் மொழியில் திருக்குறள் : முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் மத்தியில் நடந்த விழாவில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

”ரூ 41,00,000 மின்கட்டணம்” கட்ட முடியாமல் திணறும் பிரதமர் அலுவலகம்…!!

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமென்று அந்நாட்டு மின்சாரவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் மின்சார பாக்கி பணத்தை செலுத்தாமல் இருந்ததாக சர்சை எழுந்தது. மேலும் மின்சார பாக்கி வைத்துள்ளது தொடர்பாக இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ்ஸை அனுப்பியுள்ளது. அதில் பிரதமர் அலுவலகம் மின்கட்டண பாக்கியாக ரூ.41 லட்சம் வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய மின்சாரக் கட்டணம் ரூ.35 லட்சம் கட்டவில்லை. இது தொடர்பாக மின்சார வாரியம் சார்பில் […]

Categories
உலக செய்திகள்

போன் போட்ட இம்ரான்…. ”அடக்கி வாசித்த டிரம்ப்” …. பேச்சுவார்த்தையே தீர்வு…!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று […]

Categories

Tech |