புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், குடியரசுத்தலைவர் நீதி வழங்கவேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அதற்கு முன்னதாக மாணவி ரபீஹா, ஹிஜாப் அணிந்திருந்ததால் விழா அரங்கிற்குள் காவல் துறையினரால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தங்கப்பதக்கத்தை அவர் நிராகரித்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுத் தொடர்பாக மதுரை […]
