Categories
தேசிய செய்திகள்

சமகால சவால்களை எதிர்கொள்ள காந்திய கொள்கை அவசியம் – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

சமகாலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மனித இனத்திற்கு காந்திய கொள்கை அவசியம் தேவைப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடிவருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது அவர், “அமைதி, சமத்துவம் போன்ற காந்திய கொள்கைகளால்தான் உலக அளவில் அண்ணலுக்கு மரியாதை வந்து சேர்ந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அகிம்சை தேவைப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார் எஸ்.ஏ.பாப்டே!

உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

“தேசம் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரை இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்..!!

 ஸ்ரீ ராம் ஜெத்மலானி காலமானது வருத்தமளிக்கிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.   ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். மேலும் இவர் 2 ஜி , […]

Categories
தேசிய செய்திகள்

உலக சாம்பியன் ”பி.வி சிந்து” குடியரசு தலைவர் வாழ்த்து…!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

தனித்துவமான திறனைக் கொண்ட அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தம் – குடியரசு தலைவர் இரங்கல்..!!

அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானதால்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக […]

Categories
தேசிய செய்திகள்

சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்டோர் அஞ்சலி..!!  

மறைந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி,  வெங்கையா நாயுடு, எல்.கே அத்வானி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்     பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டியவர் சுஷ்மா சுவராஜ்” ஸ்டாலின் புகழாரம்..!!

ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என்று ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்  முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது)  பாஜகவை சேர்ந்தவர்.  7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். இவர் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்” ராகுல் காந்தி..!!

சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்   பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு  எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷ்மாவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு” வெங்கையா நாயுடு இரங்கல்..!!

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மாவின்   மரணம் நாட்டிற்கு பேரிழப்பு என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக  உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

“மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி” சுஷ்மாவை புகழ்ந்த ஓபிஎஸ்..!!

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி  என்று புகழாரம் சூட்டியுள்ளார்.  முன்னாள் மத்திய அமைச்சராகவும், டெல்லியின் முன்னாள் முதல்வராகவும்  இருந்த  சுஷ்மா சுவராஜ் (வயது 67).  இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்.!!

மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  சுஷ்மா சுவராஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.   முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த  சுஷ்மா சுவராஜ் (வயது 67)  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இவரது உடல்நிலை மாரடைப்பின் காரணமாக மோசமானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார்.  7 முறை மத்திய அமைச்சராக […]

Categories

Tech |