இஸ்லாமிய மக்களுக்கு ஆபத்து என்றால் முதலில் களமிறங்குவது தேமுதிக தான் இருக்கும் தெரிவித்துள்ளார் பொருளாளர் பிரேமலதா திருச்சியில் நிருபர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கூறியிருப்பதாவது “தேமுதிகவிற்கு மாநிலவை எம்பி பதவி கொடுக்குமாறு அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அதற்கு அதிமுக மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். ஒரு மாநில அவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போது நாங்கள் பேசியிருந்தோம் அதன்படி வழங்குவார்கள் என நம்புகிறோம். […]
