கேப்டன் விஜயகாந்த் நன்றாக கம்பீரமாக இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் திருவள்ளுவரை ஹிந்துக்களின் அடையாளமாக பாஜகவின் […]
