சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஷார்ஜா மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர்கள் ஜாஹிர் அசாருதீன்-பர்வீன் பானு தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் தஸ்சீன் என்ற மகள் உள்ளார். இக்குடும்பம் ஷார்ஜாவில் வசித்து வருகின்றது. ஜாஹிர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான பர்வீன் பானுவுக்கு அஜ்மானில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வரும் 16ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. ஆனால் பர்வீன் […]
