கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து கணவரே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் கமல்காந்த் (33). இவரது மனைவி ஜீவிதா (26). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கமல்காந்த் சில வாரங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், இரண்டு மாத கர்ப்பிணி என்றும் […]
