ஸ்கூட்டர் வாய்க்காலுக்குள் பாய்ந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பகுதியில் எலக்ட்ரீசியனான சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சுமித்ரா 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் ஓட்டைகுளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் சதீஷ்குமாரும், சுமித்ராவும் துணி துவைப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது வாய்க்கால் கரையோரம் ஒரு பாம்பு குறுக்கே சென்றதைப் […]
