கோட்சேவை தேசபக்தன் என குறிப்பிட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், தான் கூறியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு மசோதா 2019 தாக்கல் செய்யப்பட்டபோது, கோட்சே கூறிய கருத்துகளை திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா எடுத்துரைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், கோட்சே ஒரு தேச பக்தன் என முழங்கினார். இது மக்களவையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க […]
