முன் விரோதம் காரணமாக வாலிபர் தனது சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்குடி கிராமத்தில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தமையன் கிறிஸ்துராஜாவுக்கு பிரதீப் அந்தோணிராஜ் என்ற மகன் உள்ளார். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு குடும்பத்தினரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஆபிரகாம், பிரதீப் அந்தோணிராஜின் மனைவியிடம் பெரியவர்களிடம் மரியாதையாக பேச மாட்டாயா? என கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த […]
