விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சிறப்பு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக வெளியான அறிவிப்பிற்கு மனவுவந்து பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக […]
