குடும்ப வறுமை காரணமாக தாய் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சார்ந்தவர் மதிவாணன்-புவனா தம்பதியினர். இவர்களுக்கு அட்சயா, ஹேமாஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பணம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் வறுமை நிலவி வந்துள்ளது. அதனால் புவனா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளார். அதன்பின் இன்று காலை புவனா […]
