குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கார்மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் 255-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பொது குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதினால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் கூடி […]
