ஏலச்சீட்டு நடத்தியவரின் வீட்டை காவல்துறையினர் திறப்பதற்கு வந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்த 100-க்கும் அதிகமான நபர்கள் தங்களுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் மாரிமுத்துக்கு சொந்தமுடைய வீடு, ஏலச்சீட்டு அலுவலகம், இலுப்பை தோப்பு உள்ளிட்டவைகளை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளனர். […]
