வீட்டை சேதப்படுத்திய லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் சகாய நகர் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிக்கன் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அருள் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டின் இரும்பு கேட் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் வீட்டில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. இதனை அறிந்த அருள் […]
