பல மாதங்களாக குடிநீர் வழங்காத காரணத்தினால் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததால் நகராட்சி மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பஜார் கூட்டுரோடு பகுதியில் கே.ஆர் ரபிகான் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் பி.நாகராஜ் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் […]
