அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் பேரூராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் பொதுமக்களுக்கு உரிய பாதை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கலெக்டர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்பட பலருக்கு மனு அளித்துள்ளனர். பின்னர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி தரவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தலைப் புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். […]
