சாலையோரம் தேவையற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலையோர பகுதிகளில் அங்கங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகளில் நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றது. இதில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 50 லட்சம் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் கல்லூரி மற்றும் பள்ளிகள் பேருந்துகள், தனியார் […]
