ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை 4 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதனால் வெளியேறும் கழிவுநீர் அருகில் இருக்கும் ஆற்றுவாரிகளில் திறந்துவிடப்பட்டு பாசன குளங்களில் கலக்கிறது. இவற்றால் குளங்களில் வாழும் மீன்கள் அழிந்து விடுகிறது. இந்தத் தண்ணீரை அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்துவதால் பல தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. பின்னர் இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது மகசூல் வெகுவாக […]
