கோட்ட தபால் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தலைமை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைமை தபால் நிலையத்தில் பணியில் சேர்ந்த கண்காணிப்பாளருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் மற்றும் பணியின்போது ஆய்வுக்கு […]
