குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுமித் குமார் கல்ரா(49). இவர் உடற்பயிற்சி கூடத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இதனிடையே, இவர் குழந்தைகளின் ஆபாச படத்தின் இணையதள இணைப்பை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துவந்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் சுமித் குமாரை தேடிவந்தனர். இந்நிலையில், டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த […]
