விருதுநகரில் தரமற்ற தண்ணீரால் ஏற்பட்ட சிறுநீரக கல் பிரச்சனை ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகமானது பல கிராமங்களுக்கு செய்யப்பட்டு வந்தாலும் , இன்னும் ஒரு சில கிராமங்களில் மக்கள் நிலத்தடி நீரையே குடிநீர் ஆதாரமாக நம்பி உள்ளனர். இந்நிலையில் பாவாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சீனியாபுரம், […]
