சென்னையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைபாதையில் தஞ்சமடைந்துள்ளனர். சென்னையில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டது. இந்த கட்டுமான பணிகளில் 75 சதவீதத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளிகளே ஈடுபடுத்தப்படுவர். ஊரடங்கிற்கு பின் பல கட்டுமான நிறுவனங்கள் வேலை இல்லை என்பதால், தொழிலாளர்களை அப்போதே வெளியேற்றி விட்டது. ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் மட்டும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் பணிபுரிந்த இடத்திலேயே தங்க அனுமதி அளித்ததோடு, […]
