’புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ போட்டிக்காக தனது நண்பர் பாண்டிங்கின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன் என சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வனவிலங்குகள் கணக்கிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காட்டுத் தீயால் உருக்குலைந்த ஆஸ்திரேலியாவுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏராளமான பிரபலங்கள் உதவி செய்துவரும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் என கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். அதில் வரும் […]
