முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதவியில் இருக்கும் போது அவர் செய்தது என்ன? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வள துறை அலுவலகத்தில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அரசை குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவரது கருத்துகளை நாங்கள் பெரிதாக ஏற்றுக்கொள்வது இல்லை. அதை நாங்கள் பாஜக கட்சியின் கருத்தாகவும் […]
