பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை […]
