Categories
மாநில செய்திகள்

“எதிர்க்கட்சியின் தடையை மீறிய அதிமுக”…. பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி.!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்றபோதும், அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிவருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 649 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஜெயலலிதா முதலமைச்சராக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு” நள்ளிரவில் போலீஸ் பந்தபஸ்துடன் டோக்கன்கள் வினியோகம்…. தூங்காமல் தவித்த மதுரை மக்கள்….!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் நள்ளிரவில் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.  உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், நேற்று இரவு 12 மணியளவில் பாண்டியநாடு ரேஷன் கடையை திறந்து மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வழங்கப்பட்டன. […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் சிறுபான்மையினருக்கு பிரச்சனை வராது….. அதிமுக உறுதி….!!

நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசை  உணவுத்துறை அமைச்சர் காமராஜர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்  என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றார். மேலும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய எந்த சிறுபான்மையின மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டத்திற்கு மட்டும்தான் பொங்கல் பரிசாம்!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.  பொங்கல் பண்டிகைக்கு பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் […]

Categories

Tech |