பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளத்துக்கு […]
