முதுமலை முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. முதுமலை தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு முகாமில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதனால் பாகன்கள் யானைகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்துள்ளனர். அதன்பிறகு முகாமில் யானைகள் சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டன. […]
