தண்டவாளத்தில் தலைவைத்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மணி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்த நாள் அன்று தமிழ்மணி விளையாட போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். […]
