இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 260 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 2,546 பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,700 பதவியிடங்களுக்கும், கிராம […]
