2 லட்சம் மதிப்புடைய போலி மது பாட்டில்களை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை சூப்பிரண்டு பெருமானுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி ரயில்வே நிலையம் அருகாமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். […]
