Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : ”கைது செய்யக் கூடாது” போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

திமுக MLA  செந்தில் பாலாஜியை  கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக  கூறி  16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ 100,00,00,000 வசூல்…. குரூப் 4, குரூப் 2ஏ இரண்டிலும் கல்லாகட்டிய சித்தாண்டி ..!!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகத் தேடப்பட்டுவந்தவர் காவலர் சித்தாண்டி. இவரை ராமேஸ்வரத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த காவலரான சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“11 எம்.எல்.ஏ வழக்கு” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : ஆயுதப்படை காவலர் சித்தாண்டி கைது..!!

குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சித்தாண்டியை  சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான  ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கின்றது …!!

முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை  கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”OPS-ஐ தகுதி நீக்கம் செய்யுங்க” உச்சநீதிமன்றம் இன்று விசாரணை …!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

குரூப் 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 42 பேரில், 9 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தற்போது வரை கைதாகி இருக்கின்றனர். முக்கியமான இடைத்தரகர் ஜெயக்குமார் இன்னும் கைதாகவில்லை. இந்த முறைகேட்டின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

பொய்யான வார்த்தைகள்….. அதிர்ச்சியில் நிர்மலா சீதாராமன் ..!!

 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, இந்த வார தொடக்க நாளான இன்று நிர்மலா சீதாராமனின் வார்த்தையை பொய்யாக்கும் வகையில் பங்குச்சந்தைகள் நிலவரம் உணர்த்துகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை தாக்குதலுக்குப் பிறகு பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் வர்த்தக முடிவின்போது 900 புள்ளிகளுக்கு மேல் கடுமையாகச் சரிந்தது. இதனால் சென்செக்ஸில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் கலக்கமான நிலையில் இருந்தனர். இதனை உணர்ந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூ 1,53,000,00,00,000 இழப்பு …. ”பட்ஜெட்டால் வந்த வினை” முணுமுக்கும் அரசுக்குகள் …!!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமானவரி குறைக்கப்பட்டதால் மாநில அரசுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரம் சரிந்துவரும் நிலையில், கடந்த சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக மாநிலங்களுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2020 பட்ஜெட்டானது மாநில அரசுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார […]

Categories
மாநில செய்திகள் ராமநாதபுரம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ராமநாதபுரத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக, சென்னை சென்றிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விஷத்தைப் பரப்பாதீர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் – ஓவைஸியைத் தாக்கும் கிரிராஜ் சிங்

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விஷத்தைப் பரப்பி வருவதாகவும், ஓவைஸி போன்ற ஆட்களுக்காகதான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஓவைஸியைப் போன்ற பயங்கரவாதிகள் ஜாமியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை திக் திக்…. டெல்லியில் சோதனை….. சென்னையில் வேதனை…. சோகத்தில் அமைச்சரவை …!!

முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை  கூட்டம் நடைபெற்றது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஓ.பன்னீர்செல்வம் தகுதி நீக்க வழக்கு” உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை ..!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை” அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ மோசடி நடந்தது எப்படி ? விசாரணையில் அம்பலம் …!!

குரூப் 2ஏ தேர்வில் எப்படி முறைகேடு நடந்தது ? என்று சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு சம்பந்தமாக 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருக்கின்றார்கள். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல இந்த குரூப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”ரஜினி தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது” பிரபல இயக்குனர் அதிரடி …!!

தமிழகத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா சமீப சில காலமாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். தமிழ் தேசியம் மீது பிடித்துக்கொண்ட அவர் தமிழக அரசியல் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்க கூடியவர்.இந்நிலையில் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கள் , செயல்பாடுகள் அவர் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் இயக்குனர் பாரதிராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப்-2ஏ முறைகேடு – மேலும் 3 பேர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாகவும் , அவர்களை CBCIDI போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

சிக்குன செத்த… ”ஓடி ஒளியும் அரசு ஊழியர்கள்”…. விரட்டும் சிபிசிஐடி …!!

குரூப் 2A தேர்வு முறைகேட்டில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து TNPSC உரிய ஆவணங்களை CBCID போலீசிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த CBCIDI போலீசார் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காரைக்குடி பதிவாளர் அலுவலக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2ஏ முறைகேடு – 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவு …!!

குரூப் 2A முறைகேடு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

‘இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்’ – குடியரசு துணைத் தலைவர்

21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ஹுபலி நகரில் உள்ள தேஷ்பாண்டே திறன் மேம்பாட்டு மையத்தை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியா ஒரு இளம் நாடு என்றும், இளைஞர்கள் கல்வி மற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உழைக்க வேண்டும் என்றும் கூறினார் மேலும் பேசிய அவர், […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

MPயிடம் கேள்வி கேட்ட மீனவருக்கு சரமாரி அடி ….!!

தனியார் மண்டபத்தில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மக்களவை உறுப்பினருக்கு எதிராகக் கேள்வியெழுப்பிய மாவட்ட மீனவர் அணித் தலைவர் சபின் என்பவரை வசந்தகுமார் ஆதரவாளர்கள் அடித்தில் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார். இதில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் – நாளை நடக்கிறது

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி ஆண்டின்  முதல் தமிழக அமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சிஏஏ சல்லடைப் போன்றது’ – கனிமொழி எம்பி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடைப் போன்றது என்று கனிமொழி எம்பி சாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் …!!

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மறுநாள் 4ஆம் தேதி , செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில்  வைத்து அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.தமிழக பட்ஜெட் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.குறிப்பாக வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரை எப்படி இருக்க வேண்டும். எந்தெந்த துறைக்கு எந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்போகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் இன்னும் தேர்தல் நடைபெறதாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த MP…. ”அதிர்ச்சியில் அதிமுக”…. இதுதான் கூட்டணி தர்மமா ?

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைத்தார். தற்போது அவர் முக்கிய பொறுப்பில் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா அவர்களும் கடந்த 6 மாதமாக பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – மேலும் 2 பேர் கைது … சிபிசிஐடி அதிரடி …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை CBCIDI போலீஸ் கைது செய்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாங்க… பழம் சாப்பிடுங்க ….. பிரேமலதாவை சீண்டிய அமைச்சர் … EPS அதிர்ச்சி

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில்  உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக கட்சி தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பேசிய பிரேமலதா, தொண்டர்களின்விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம். கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிறைகளும் குறைகளும் இணைந்த பட்ஜெட் – விஜயகாந்த் அதிருப்தி …!!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று விஜயகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவித்தார். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் , பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில் இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டின் தாக்கத்தை உணர திங்கள் வரை காத்திருங்கள்: நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை கார்ப்பரேட் துறையில் உணரவேண்டும் என்றால் நாம் அனைவரும் திங்கள்கிழமை போன்ற சாதாரண வர்த்தக நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-21ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கிடையே மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறையில் எவ்வித ஏற்றங்களும் இன்று ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள் நாட்டை பிளவுபடுத்தியவர்கள்’

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”ஜெய்ஸ்ரீராம்” முழக்கமிட்டே துப்பாக்கிச் சுடு – விசாரணையில் அதிர்ச்சி தகவல் ….!!

டெல்லி CAA போராட்டத்தில் துப்பாக்கிச் சுடு நடத்தியவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப்-2ஏ முறைகேடு – அரசு ஊழியர்கள் கைது …!!

குரூப் – 4 தேர்வு முறைகேட்டில் 16 பேரும் , குரூப் -2ஏ தேர்வு முறைகேட்டில் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு …..!!

டெல்லி ஷாகின் பாக்  பகுதியில் CAA போராட்டம் நடைபெற்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSக்கு ஆப்பு… EPS அரசுக்கு சிக்கல்….. ”செக் வைத்த நீதிமன்றம்” திமுக போட்ட ஸ்கெட்ச் …..!!

கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 MLA தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு விசாரணை மீண்டும் வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் மீது துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவு மீறி அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் இந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. மாறாக அவர்கள் 11 பேரும் மீண்டும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பத்தரை மாற்றுத் தங்கம், சந்தேகப்படாதீங்க” மோடியை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர். நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – 4 ஆம் தேதி விசாரணை …..!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் 4ஆம் தேதி விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]

Categories
அரசியல்

10 % வளர்ச்சியா ? ”வாய்ப்பே இல்லை’ – அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு ….!!

அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. இருப்பினும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து, திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறுகையில், “அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’பெரியார் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அந்தக் காலத்தில் பேசிய பெரியார் கருத்தை இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சர் லோக்நாத் சர்மா, அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

2020-21 மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்… எப்படி இருக்கும் அறிவிப்பு ?

மத்திய அமைச்சரவை கூட்டம் , குடியரசுத்தலைவருடன் சந்திப்பு என்று இரண்டு சம்பிரதாயங்களை கடந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது. 2020 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியாகவும் சரி , இந்தியாவிலும் சரி வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது நன்றாக அறிந்ததே. 5 சதவீதம் வளர்ச்சி என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் குறைவானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

நரேந்திர மோடி அரசில் நிதியமைச்சராக அங்கம் வகிக்கும் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்திக்கு பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

நிதி அமைச்சர்களில் அதிகமுறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவர்கள் யார்?

இந்திய நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய் பத்து முறையும், ப. சிதம்பரம் ஒன்பது முறையும், எட்டு முறை பிரணாப் முகர்ஜியும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்து இருக்கின்றனர். இந்திய அரசின் நிதி அமைச்சகம் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் துறையாகும். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதித்துறை அமைச்சராக ஆர். கே. சண்முகம் பணியாற்றினார். தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். கே. சண்முகம் […]

Categories
தேசிய செய்திகள்

வளர்ச்சி சார்ந்த பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை சமிக்ஞை!

ஹைதராபாத்: பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுகவுடன் அமமுக போட்டிபோட முடியாது – திவாகரன்..!!

திமுக, அதிமுகவுடன் புதிதாக தொடங்கிய அமமுக போட்டிபோட முடியாது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறது.  அதேபோல டிடிவி தினகரனின் அமமுகவும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக தயாராகி வருகிறது. இந்தநிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். என்னுடைய கணக்கு என்றும் தப்பாது. வேரூன்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!!

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்த போது 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம்  2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு…. மேலும் 4 பேர் கைது..!!  

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதிக்க்கப்பட்டு TNPSC அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்துள்ள  நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. டிஎன்பிஎஸ்சி தட்டச்சராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப்-2 ஏ  தேர்வு முறைகேடு : சிபிசிஐடி வழக்குப் பதிவு …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்த TNPSC அதிகாரிகள் போலீசிடம்  ஆவணங்களை ஒப்படைத்த நிலையில் CBCID போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு …..!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியதாக 16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி….. டீ கடைக்காரரிடம் வழிப்பறி… மிரட்டல்…. திமுக நிர்வாகி கைது…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை தண்டையார்பேட்டையில் கன்னியப்பன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் டீ கடை  உரிமையாளர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் திமுக வட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு ….!!

குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 39 பேரின் பெயரை தவிர்த்து விட்டு புதிய தேர்ச்சி பட்டியலை TNPSC […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குட்ட குட்ட குனியமாட்டோம் – பிரமலதா விஜயகாந்த் ஆவேசம் …!!

தேமுதிக குட்ட குட்ட குனியமாட்டோம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னனில் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பிரேமலதா, கேப்டனை பொருத்தவரைக்கும் தொண்டர்கள் விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம். கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்பது […]

Categories

Tech |