Categories
அரசியல் மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஸ்டாலின் உறுதி

 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக திமுக கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”நாம் எவ்வளவு சரியான பாதையில், முறையாகவும் எச்சரிக்கையாகவும் அளந்து அடியெடுத்து வைத்துச் செல்கிறோம் என்பதை, அரசியல் எதிரிகளின் அலறலில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: இந்தியா மீதான கருத்தாக்கத்தின் தீர்ப்பு!

“உலகமே உடல், டெல்லி அதன் ஆன்மா” என்றார் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப். டெல்லி ஒரு இடமாகவும், ஒரு கற்பனையாகவும் எப்போதும் முக்கியத்துவத்துடன் இருக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவர். அவரது அர்த்தம் பொதிந்த வரிகள் எந்த அளவுக்கு நிதர்சனமானவை என்பதை தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. சமூக – அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் இந்தத் தேர்தல், டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

”ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்” அமைச்சர் எச்சரிக்கை …!!

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஸ்டாலின் என் மீது குற்றச்சாட்டு கூறினால் வழக்குத் தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் செனாய் நகர் அம்மா அரங்கில் நடந்தது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ தமிழ்நாட்டில் மட்டுமே 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூங்கி எழுந்து, […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதாரம் மேம்பட உடனடி வாய்ப்பு இல்லை… ‘கிரிசில்’ நிறுவன ஆய்வில் தகவல் …!!

2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் உடனடியாக மேம்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று  ‘கிரிசில்’ (Crisil) நிறுவனம் கூறியுள்ளது.2019 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலேஇந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறைவான உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சனைகளோடு, பொருளாதார மந்த நிலையும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகக் குறைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, அதற்கடுத்த ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 822,00,00,000….. ”ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு பாக்கி”…. RTIஇல் பகீர் தகவல் …!!

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’, பொறுப்பற்ற மத்திய ஆட்சியாளர்களால், 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை முழுமையாக தனியார் முதலாளிகளுக்கு விற்றுவிட மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தற்போது பதில் அளித்துள்ளது.அதில், “குடியரசுத் தலைவர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றங்கள் …!!

டிஎன்பிஎஸ்சி_யில் புதிய மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வில் வெற்றி  பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை , ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும். முறைகேடு முறைகளை கண்டறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைக்கு வருகிறது. இணையவழி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”ஜெயகுமாருக்கு 7நாள் சிபிசிஐடி காவல்” நீதிமன்றம் அதிரடி …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுனா புடிக்காது…. ”டியூப்லைட் என்பது அழகல்ல” ராகுல்காந்தி விமர்சனம் …..!!

பிரதமர் டியூப்லைட் என பேசியது அழகல்ல என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் நேற்று பிரதமர் மோடி டியூப்லைட் என பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலத்த ராகுல் , மக்களவையில் டியூப்லைட் என விமர்சனம் செய்வது அழகல்ல. பிரதமராக இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளன. வயநாட்டில் மருத்துவ கல்லூரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திருமாவளவன் மனு தள்ளுபடி” நீதிமன்ற உத்தரவால் அதிமுக மகிழ்ச்சி …!!

திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்கு பெற்றநிலையில் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்றிருந்தார். 88 வாக்கு வித்தியாசத்தில் முருகுமாறன் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். அதில் காட்டுமன்னார் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜெய்குமாருக்கு சிபிசிஐடி காவல் ? 2.30க்கு தீர்ப்பு ….!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”நான் தவறு செய்யவில்லை”…… கண்ணீர் விட்டு அழுத ஜெயக்குமார்…..!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”2016 ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடு” களையெடுக்க போகும் சிபிசிஐடி …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள  கடிதம் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 50,00,000 பைன் ….. 5 ஆண்டு ஜெயில்….. ”போலி விளம்பரத்துக்கு செக்” …. அரசு அதிரடி

உண்மைக்குப் புறம்பாக அழகுசாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் என்பதற்கு புதிய சட்ட திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் தேவை என்ன ? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் : எங்களுடைய அழகுசாதன பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துங்கள் பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும். இந்த மாத்திரையை தொடர்ந்து உண்டால் அஜீரணக் கோளாறு வராது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

‘அரசியலில் ரஜினி ஒரு கேம் சேஞ்சராக இருப்பார்’ – சீனிவாசன்

கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் எனத் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது தேசபக்தி உள்ளவர்கள், தேசிய சிந்தனை உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதே மோடியின் வேலை

நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி எம்.பி., செய்தியாளர்களிடம்  கூறியதாவது: நாட்டின் இன்றைய மிகப்பெரிய முக்கிய பிரச்சனையான வேலையின்மை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மாறாக காங்கிரஸ் குறித்தும், நேரு குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடி பேசுகிறார். முக்கிய பிரச்சனைகளிலிருந்து நாட்டை திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை. முன்னதாக மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் […]

Categories
அரசியல் நீலகிரி

அமைச்சர் மீது புகாரளித்த சிறுவன் – ‘நாளை வரும்படி’ கூறிய காவல் துறை!

முதுமலையில் பழங்குடியின சிறுவனை செருப்பைக் கழற்ற வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தபட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் பூஜை செய்வதைக் காண அமைச்சர் சென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ எதிர்ப்பு போராட்ட பந்தலா ? திருமண பந்தலை அகற்றிய காவல்துறை ..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் நோக்கில் போடப்பட்ட பந்தல் என அஞ்சி திருமணத்திற்காக போட்ட பந்தல் என அஞ்சி உத்தரபிரதேச காவல் துறையினர் அகற்றினர். உத்தரபிரதேசத்தில் உள்ள மொஹல்லா மிர்டாகன் பகுதியில் உள்ள பிஜ்னோர் நகரில் பிப்ரவரி 4ம் தேதி நடந்த திருமணத்திற்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் அது சிஏஏ, என்பிஆர் திருத்த சட்டத்திற்கு எதிராக  போடப்பட்ட பந்தல் என முறையாக விசாரணை செய்யாமல் கூட பந்ததை அகற்றினர். காவல்துறையினரின் நடந்து […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

9 ,10 வரை போதும்…. ”இடைநிற்றல்”… 100 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி …!!

கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிப்படிப்பின் இறுதிக் கட்டமான 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் இருந்து விலகுபவர்கள் எண்ணிக்கை குறித்து  ராஜஸ்தான்  நாடாளுமன்ற உறுப்பினர்  பி பி சவுத்ரி மற்றும் மகாராஷ்டிர  நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விடை அளித்தார்.   அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகாவில் பள்ளிப் […]

Categories
மாநில செய்திகள்

ரூ 6,000,00,00,000…. ”தமிழகத்துக்கு ஸ்வாஹா”….. அதிர்ச்சி தகவல் …!!

15ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் தொடர்பாகவும், இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் தொடர்பாகவும் சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் ஜோதி சிவஞானம் பேசியது தொடர்பாக பார்க்கலாம். மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எவ்வளவு, மாநிலங்களுக்கு அதனை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது தீர்மானிப்பது நிதிக்குழு. 15ஆவது நிதிக்குழு, 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 15ஆவது நிதிக்குழு பிரச்னைகள் : நிதியை ஒதுக்க மாநிலங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டில் ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு

ரயிலில் பயணிகள் வசதிகளின் கட்டுமான அமைப்புக்கு, நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில் ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையுடன் (பட்ஜெட்) ரயில்வே பட்ஜெட்டையும் கடந்த ஒன்றாம் தேதி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், “ரயில் பயணிகளின் வசதிக்காக ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெரும் தொகை ரயில் பயணிகள் வசதிகளுக்கான கட்டுமானப் பணிக்காகச் செலவிடப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தலலுக்காக ராமர் கோயில் அறக்கட்டளை – சிவசேனா

ராமர் கோயில் விவகாரம் அரசியலாகும் என்று தாங்கள் கருதவில்லை என்று கூறியுள்ள சிவசேனா, டெல்லி தேர்தலை கவனத்தில் கொண்டு ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ராமர் கோயில் அறக்கட்டளை குழுவை அறிவித்தார். 15 பேர் கொண்ட அந்தக் குழு தன்னாட்சி அதிகாரத்தில் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: பாஜக, கெஜ்ரிவால் மீது காங்கிரஸ் தாக்கு

பாஜகவின் கொள்கைகளால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் என்று வினாயெழுப்பிய சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தாக்குதல் தொடுத்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்குள் தேர்தல் பரப்புரை நிறைவுபெறுகிறது.இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

முகாந்திரம் இருப்பதால் விஜய் வீட்டில் சோதனை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

முகாந்திரம் இருப்பதால்தான் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடப்பதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியின் 150ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதில் இளங்கலை பட்டப்படிப்பில் 1,600 மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் 700 மாணவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : முறைகேட்டில் தொடர்பில்லை – ஜெயக்குமார் மனு …!!

குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜயை விட ரஜினி அதிக சம்பளம்…. பயத்தில் மிரட்ட பார்க்கிறார்கள் – சீமான் ஆதரவு …!!

விஜயை மிரட்டுவதற்கு இந்த சோதனை நடைபெறுகின்றது என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயை விட ரஜினி 120 கோடி சம்பளம் அதிகமாக சம்பளம் வாங்குகின்றார். ரஜினி வீட்டுக்கு ஏன் போகவில்லை. ரஜினி அறிக்கை விட்ட்டா அது தலைப்புச் செய்தியாக வருகின்றது. 66 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார் என்று செய்தி வரவில்லை அவருக்கு ஒரு புனிதர் வேடம்போட்டு காட்டுகின்றார். தமிழர்கள் போராடி குடமுழுக்கு தமிழில் நடத்த வைத்த செய்தியை மறைபடத்திற்கு அவரை வைத்து பேட்டி கொடுக்க வைக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வருக்கு நன்றி….. ”தை பூசத்துக்கு லீவ் விடுங்க”….. சீமான் கோரிக்கை …!!

தை பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதலவர் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டியளித்தார். இன்று தமிழக முதல்வரை இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , 5 , 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தோம். தமிழ்  கடவுள் முருகரின் தைப்பூச விழாவில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். கிருஷ்ண ஜெயந்தி  […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW – குரூப் 2ஏ முறைகேடு : கைதான 2 காவலர்கள் பணியிடை நீக்கம் …!!

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் …!!

TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி  சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
அரசியல்

JUST NOW : முதல்வர் – சீமான் சந்திப்பு …!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முதல்வரை சந்தித்தார். அதில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்ததற்காக நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் , குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் …!!

TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார். இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் சரண் ….!!

குரூப் 2-A  , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார். குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார்  அறிவித்திருந்தார்கள். நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”வெளியாகும் அடுத்தடுத்த முறைகேடு” மதுரை தேர்வர்கள் பரபரப்பு கடிதம் …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக 500 வெளிநாடுவாழ் இந்தியர்கள் பரப்புரை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற எட்டாம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

‘பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முழுமையான வெற்றியல்ல’ – சீமான்

பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியது முழுமையான வெற்றியல்ல என்றும்; அனைத்து தமிழ் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை நோக்கிச் செல்வது தான் முழுமையான வெற்றி எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா தமிழிலும் நடைபெற்றது. இவ்விழாவில், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடமுழுக்கு விழாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’ரஜினிக்கு முன்பு நாங்கள்தான்’ – அமைச்சர் ஜெயக்குமார் பிடிவாதம்!

நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த இயக்கம் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ராயபுரம் பகுதியில் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடத்தையும் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ குடியுரிமைச் சட்டத்திற்கு ரஜினிக்கு முன்பே எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போதுதான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசிவிட்டது. இலங்கைத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார். நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மணமக்களிடம் கையெழுத்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ராமர் கோவில் கட்ட ரெடி” பிரதமர் மோடி அறிவிப்பு …!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

CAAக்கு போராடாதீங்க…. பிரச்சனை வரும்…. வழக்கு போடுவாங்க…. வாழ்க்கை போயிடும்…. ரஜினி பேட்டி …!!

போராடும் மாணவர்களை சுயநலத்திற்க்காக அரசியல் கட்சிங்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு. இதில் யார் வெளிநாட்டுக்காரர் ? யாரு நம் நாட்டுக்காரர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை […]

Categories
மாநில செய்திகள்

முஸ்லிம்களுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பேன்- ரஜினி அதிரடி பதில் …!!

முஸ்லீம்களை வெளியே அனுப்பினால் நான் தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு.இதில் யார் வெளிநாட்டுக்காரர் யாரு நாட்டுக்காரர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை , அதை […]

Categories
மாநில செய்திகள்

CAA அரசியல் செய்ய பீதியை கிளப்புறாங்க- ரஜினிகாந்த் அதிரடி …!!

CAA குறித்து அரசியல் கட்சிகள் பீதியை கிளப்புகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு.இதில் யார் வெளிநாட்டுக்காரர் யாரு நாட்டுக்காரர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை , அதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரூப் 4 முறைகேடு : ஜெயக்குமார் எங்கே ? ”3 மாநிலங்களுக்கு விரைந்த சிபிசிஐடி”

குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய குற்றவாளியாகவும் , தலைமறைவாகவும் இருக்க கூடிய ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குரூப்-4 தேர்வு , குரூப்-2 ஏ தேர்வு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கையில் வைத்து கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி முறைகேடு : 3 மாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான  ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை  சிவகங்கை – ராமநாதபுரம் செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்த முன்னாள் மந்திரி – மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பு

பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி பபன்ரா பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்தது  மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய பா.ஜனதாவின் முன்னணி தலைவரும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான பபன்ராவ் லோனிகர் சமீபத்தில் ஜல்னா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது விவசாயிகள் நிதியுதவி பெறுவது பற்றி பேசினார் . ‘அவ்வாறு அவர் பேசுகையில் அரசிடம் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விரும்பினால், நாம் பர்தூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன ? பேசி இருக்கீங்க… மக்களவையில் விளாசிய திருமா …. !!

குடியரசுத் தலைவரின் உரை சனாதன அரசை பாராட்டும் விதமாக இருப்பதாக மக்களவையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவரின் உரையை விமர்சித்தும் இன்று மக்களவையில் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, ” குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டில் பல புரட்சிகர சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசை பாராட்டியிருக்கிறார். அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்கும் விதமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்று பேசியுள்ளார். ஆனால் நடைமுறையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மாஸ் காட்டிய ராசா…. ”பின்வாங்கிய அரசு”…. சில நொடிகளில் உத்தரவு …!!

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விளிம்பு நிலையிலுள்ள குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் என்று மக்களவையில் ஆ. ராசா தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா இன்று மக்களவையில் தமிழ்நாடு அரசு அறிவித்து பின் ரத்து செய்த 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பேசினார். அப்போது, “தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இல்லாமல் இடையில் 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்தத் தேர்வானது விளிம்பு நிலையிலுள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே அறிக்கை… ”சோலி முடிஞ்ச கூட்டணி”… கொண்டாடும் பா.ம.க … கோபத்தில் அதிமுக….!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது..!

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ – ஜெயக்குமார்

இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், […]

Categories
தேசிய செய்திகள்

என்னது..!… வேலையில்லையா ? அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி …!!

வேலையிழப்பு குறித்து மத்திய அரசிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்யும் அளவுக்கு எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருன்றனர். இது தொடர்பாக கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை […]

Categories

Tech |