Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டை தாக்குதலுக்குக் கண்டனம்……. புதுச்சேரியில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் …!!

வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர், நேற்று தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து, புதுச்சேரியின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் புதுச்சேரி புறநகர் பகுதிகளிலும், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து இஸ்லாமியர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, புதுச்சேரி வில்லியனூர் எம்ஜிஆர் சிலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BIG BREAKING : TNPSC தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் …!!

TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது.  அதில் , குரூப் […]

Categories
மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை இத்தனை கோடியா..!!

2017-18 ஆம் ஆண்டில் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகை 4,073 கோடி ரூபாயாக உள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள்கள் மற்றும் சேவை வரிகளை (ஜிஎஸ்டி) பொறுத்தமட்டில், 2017-18ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 4,073 கோடி ரூபாய். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உரிய நேரத்தில் வரும் என எதிர்பார்த்தாலும் 2021-22 வரவு, செலவு திட்டத்தில் 46,195.55 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உலக வங்கியிடம் கையேந்தி நிற்கிறோம்” பட்ஜெட் குறித்து சாடிய பாலகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு தனது உரிமையை மத்திய அரசிடமிருந்து பெற தயங்கியதால் இன்று உலக வங்கியிடம் கடன் கேட்டு கையேந்தி நிற்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மத்திய அரசை சாடியுள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ”அதிமுக அரசைப் பொறுத்தவரையில் இந்த பட்ஜெட்தான் அவர்களின் கடைசி பட்ஜெட் என்று கூறலாம். ஏனெனில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை – முத்தரசன் விமர்சனம்

அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ‘திருவாரூரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என அறிவிக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மகாலிங்கம் என்ற விவசாயி உயிரிழந்ததையடுத்து, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் கூடி, தமிழ்நாட்டை வறட்சியால் பாதிக்கக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. அதன்பின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் எப்போது தொடக்கம்?

சிவகங்கை மாவட்டம் கீழடி 6ஆம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 19ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெறவுள்ளது. இது குறித்து அறிவிப்பு பொங்கலுக்குப் பின்னர் வெளியாகும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். மேலும் கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு தொல்லியல்துறையின் சார்பாக நில உரிமையாளர்களிடமிருந்து ஒப்பந்தம் மூலமாக ஆய்வுக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் திடீர் மறைவு

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் நாளை சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (67). இவர் அதிமுக கட்சி நிர்வாகியாக, தனது கட்சிப் பணியைத் தொடங்கி, 2001ஆம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இரு நாட்களுக்கு முன்பு கேரள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பட்ஜெட்டில் வேளாண் மண்டலம் குறித்த தெளிவு இல்லை’ – திருமாவளவன்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி கடன் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடனை அரசு எவ்வாறு அடைக்கப்போகிறது என்றோ அல்லது ஈடு செய்யப்போகிறது என்பது குறித்தோ அறிவிப்பு இல்லை. கடலூர் மாவட்டத்திற்கான […]

Categories
மாநில செய்திகள்

“வேலைவாய்ப்பை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை” – கே.ஆர். ராமசாமி

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பை பற்றி ஒருவார்த்தைகூட அதிமுகவினர் பேசவில்லை என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 2020-21யில் கலந்துகொண்ட காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மூன்று மணி நேரம் அதிமுக அரசு வாசித்த நிதி நிலை அறிக்கையில் எந்த நல்ல அறிவிப்புமில்லை. இது போன்றதொரு மோசமான நிதி நிலை அறிக்கையை பார்த்தது இல்லை. அதில் வேலை வாய்ப்பை பற்றி ஒரு வார்த்தைகூட […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறைகேடு….. ஆட்டம் காணும் அப்பாவு….. திணறும் திமுக….. விசாரணையில் பகீர்

TNPSC தேர்வு முறைகேட்டு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவின் முக்கியப் பணிகளில் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் போதிய வாய்ப்புகள் வழங்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெறிக்க விடும் அதிமுக….. ”காழ்ப்புணர்ச்சி வழக்கு”…. கதறும் செந்தில் பாலாஜி …!!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்பட்ட ஒன்று தான் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்கு ஆஜரான போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிநீர்…. சாலை…. எல்லா வசதியும்…. நல்லா கிடைக்கணும்….. பூமி பூஜை செய்த….. சாத்தூர் MLA….!!

விருதுநகர் அருகே குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைபடுத்த அப்பகுதி MLA  பூமி பூஜை செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அப்பகுதி எம்எல்ஏவான ராஜவர்மன் என்பவர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி, 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை வசதி, பஸ் நிலையத்தில் சிறிய அளவில் உயர் மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நடத்தினார். இந்த  நிகழ்வில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினிக்கு என்சிஆர் என்றால் என்னவென்றே தெரியாது’ – தமிழன் பிரசன்னா கடும் தாக்கு

 என்சிஆர் என்றால் ரஜினிக்கு என்னவென்றே தெரியாது என திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடுமையாக விமர்சித்துள்ளார். நாகை மாவட்டம் பொறையாரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் பங்கேற்று உறையாற்றினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழன் பிரசன்னா கூறுகையில், “மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது […]

Categories
மாநில செய்திகள்

இவரா இப்படி..? – சீமானின் அந்தரங்க காட்சிகளை வெளியிட்ட நடிகை விஜயலக்ஷ்மி – வைரலாகும் வீடியோ..!

பிரபல சினிமா இயக்குனரும் , நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவருமான சீமான் குடிபோதையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை நடிகை விஜயலக்ஷ்மி வெளியிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். அரசியல் கட்சியில் பிஸியாக இருக்கும் சீமான், சதா சர்வ காலமும் எங்கேயாவது ஒரு கூட்டம் மற்றும் மேடைபேச்சுகளை பேசி தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார். இவரது கட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக கிட்ட தட்ட 2010-ம் […]

Categories
மாநில செய்திகள்

‘டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாறும்’ – அமைச்சர் காமராஜ் உறுதி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாற்றப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி, மாவட்ட ஆட்சியர் ஆனந்த், உணவுப் பொருள் குற்றப்புலனாய்வு காவல் இயக்குநர் பிரதீப் உள்ளிட்டோர் நெல் மூட்டைகளின் எடை, தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். நெல் மூட்டை ஆய்வின்போது மூட்டை எடை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘டெல்லி தோல்விக்கு வெறுப்பு அரசியலே காரணம்’ – அமித் ஷா

பரப்புரைகளின்போது முன்வைக்கப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்குக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே, ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, தேர்தல் தோல்விக்குக் காரணம் வெறுக்கத்தக்க பேச்சுக்களே என உள்துறை அமைச்சர் அமித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் பயன்படுத்தும் எரிபொருளுக்கு இவ்வளவு விலையேற்றமா? கே.எஸ். அழகிரி கேள்வி

மக்கள் பயன்படுத்தும் எரிபொருளுக்கு இவ்வளவு விலையேற்றமா? என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வியெழுப்பினார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “ஒரு சிலிண்டரின் விலை ரூ.148 உயர்ந்துள்ளது. இது மிக அதிகமானது. மக்களின் அரசு என்று சொல்லுபவர்கள் மக்கள் பயன்படுத்தும் எரிபொருளுக்கு இவ்வளவு விலை ஏற்றத்தை செய்து இருக்க கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போல் ஒவ்வொரு காரியம் செய்யும் போது அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – இன்று விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டு வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குரூப் 4 , குரூப் 2 ஏ ,  விஏஓ தேர்வு முறைகேட்டு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 43 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் ஜெயக்குமாரின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாமதம் ஏன் ? – ஆணையம் பதில் …!!

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாராகாததால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை முடிவு செய்யவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் உள்ளாட்சி பதவிகள் 2016ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் ஜனநாயக அடிப்படையில் இல்லாமல் , அரசுடன் இணைந்து தேர்தல் நடத்தாமல் இருந்தன.  கடந்த டிசம்பர் 9ம் தேதி மாவட்ட பஞ்சாயத்துக்கு தேர்தல் அறிவிப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு செக்…. உச்சநீதிமன்றம் உத்தரவால் அலறும் அரசியல் கட்சிகள் ….!!

குற்றப்பின்னணி வேட்பாளர்கள் விவரத்தை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி வேட்பாளர்களின் விவரங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக கூடிய அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் , […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள்

‘டெல்லி தோ்தலில் பாஜகவின் தோல்விக்கு குடியுரிமை திருத்தச் சட்டம்தான் காரணம்’ – திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால்தான் டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியில் நடைபெற்ற பொதுத்தோ்தலில் பாஜகவிற்கும் சங்பரிவாா் அமைப்பிற்கும் மக்கள் பாடம் புகட்டியுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலில் புறக்கணித்துள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனா். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : சீமான் மீது வழக்கு பதிவு..!

சென்னை காமராஜர் நினைவு மண்டபத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அரசுக்கு எதிராகவும், வன்முறையயை தூண்டும் விதமாக பேசியதாகவும் சீமான்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கலகம் செய்வதற்காக பிறரை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோட்டூர்புரம்  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

2021ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் – பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!

வருகின்ற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 20ஆவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் உள்ள 118 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கட்சிக்கொடி ஏற்றிவைத்த பின்பு அலுவலகத்தில் கூடியிருந்த 500க்கும் அதிகமான தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாநில செய்திகள்

‘நவீன கால ராஜராஜசோழனாக எடப்பாடி திகழ்கிறார்’ – ராஜேந்திர பாலாஜி

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க அதை வேளாண் மண்டலமாக விரைவில் சட்டமாக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் எனவும், நவீனகால ராஜராஜ சோழனாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டினார். நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பெற்றோர்களுக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : ”பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பள்ளிகளில் காலை உணவு திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய திட்டத்தை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  ஏற்கனவே சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 – புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

‘வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ – சுனில் அரோரா

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ்வின் கருத்தரங்கில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி குறியீடு குறித்து எதிர்வரும் நாள்களில் ஆலோசனையில் ஈடுபடும் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நுகர்வோர் பணவீக்கம் 7.59%ஆக அதிகரிப்பு …!!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக நுகர்வோர்  பணவீக்கம் 7.59 %அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் 7.35 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2020 ஜனவரியில் 7.59 % ஆக அதிகரித்துள்ளது. காய்கறி , பழங்கள் , பருப்பு வகைகள் , எரிபொருள் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. கடந்த டிசம்பரில்  1.8%ஆக இருந்த தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஜனவரியில் -0.3%ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி முறைகேடு மேலும் ஒருவர் கைது …!!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை மறுநாள் விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை” மாஸ் காட்டிய புதுவை முதல்வர் …!!

CAA-க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக அரசை டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை என்று   நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் வெளிநடப்பு சேதனர். இந்த கூட்டத்தொடரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜூன் 30க்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடத்த உத்தரவு

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜூன் 30இல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்க்கில் ,  தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது, அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் , ஏப்ரல் 30-ம் தேதியுடன் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவி காலம் முடிவதால் புதிதாக தேர்தல் நடத்தப்படும் , அதற்கு  ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்ட வேண்டுமென்று வழக்கு தொடர்ந்திருந்தார். அதே போல விஷால் தரப்பில் சிறப்பு அதிகாரியை நியமிக்க […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : சி.ஏ.ஏ.வுக்கு எதிராக புதுச்சேரியில் தீர்மானம் ….!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் வெளிநடப்பு சேதனர். இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்கும் வகையில் அதிமுக , […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 1,50,000,00,00,000 பிரீமியம் வசூலித்து எல்ஐசி சாதனை…சொத்துமதிப்பு ரூ.32 லட்சம் கோடியைத் தாண்டியது …!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) எனப் படும் எல்ஐசி-யின், புதிய பிரீமிய வருவாய் முதல் முறையாக ரூ. 1 லட்சத்து50 ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனைபடைத்துள்ளதாக, அந்த நிறுவனத்தின்தலைவர் எம்.ஆர். குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:எல்ஐசி நிறுவனம் புதிய வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.முதல் முறையாக இந்த மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இதன்மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 77.61 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘இந்தியாவில் இது புதுசு’ – ஆம் ஆத்மி முன்வைக்கும் நவீன அரசியல் என்ன?

மத, இன, மொழி, சாதி ஆகிய அடையாளங்களை முன்வைத்தே சுதந்திர இந்தியாவின் அரசியல் மையம் கொண்டிருந்த நிலையை மாற்றி, நல்லாட்சி என்ற புள்ளியை அடிப்படையாகக் கொண்டு உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல், டெல்லியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. நாடு இன்று கெஜ்ரிவால்களைத் தேடும் நிலைமையில் உள்ளது. முன்பெல்லாம் நல்லவன் யாராவது கிடைத்தால், “என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்” என்று கூறிய காலம் போய், ’முதலமைச்சர் நாற்காலி காலியாக இருக்கு, நாடு ஆள வா எனக் கெஞ்சும் நிலைக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதுவித அரசியலில் ஈடுபட்டோம் – அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரை …!!

வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியலில் ஈடுபட்டது தேர்தலில் வேலை செய்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி 63 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “‘டெல்லி மக்களை நேசிக்கிறேன். புதுவிதமான அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து யோசிக்கலாம்’ – ராமதாஸ்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பின் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று பாமக கட்சி   நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை பாமக கட்சி அலுவலகத்தில் பாமக சார்பாக தயார் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். வழக்கம்போல பாமகவின் நிதிநிலை அறிக்கையை அங்கிருந்த பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், செம்மரம் போல் பனை மரம் வெட்டுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கூட்ட்டணி மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு …!!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.திமுக , மதிமுக , கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு , அமர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING – ”ஆம் ஆத்மி முன்னிலை” அடிச்சு தூக்கியது …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்றுவருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிஏஏ போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் டெல்லி தேர்தல் முடிவுகள்!

சமீபத்தில் முடிவடைந்த டெல்லி சட்டப்பேரவையின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சிஏஏ, என்ஆர்சி தொடர்பான போராட்டங்களின் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விளக்ககுகிறார் மூத்தப் பத்திரிகையாளர் சஞ்சய் கபூர். டெல்லி தேர்தலைப் பொறுத்தவரை அதில் பல்வேறு சவால்கள் உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியைப் பெறும். இதுவே, தொங்கு சட்டப்பேரவையோ அல்லது சுமாரான வெற்றியோ பெறுமேயானால், நாடு முழுவதும் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியீட்டில் தாமதம்; காரணத்தைக் கூறிய தேர்தல் அலுவலர்

சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி மாலையே அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குப்பதிவு நடைபெற்று பல மணி நேரங்கள் ஆன பிறகும் அதுகுறித்த விவரங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக உள்ளனர்’ – அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

நடிகர் விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மணிகண்டனுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடடிக்கை எடுக்கக்கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், ‘ஒரு விவசாயி முதலமைச்சரானால் என்ன […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

1 முறை பண்ணினா…. 2 சொட்டு ரத்தம் ஊறும்….. கை தட்டி மகிழ்ந்த தொண்டர்கள்…. செல்லூர் ராஜு விளக்கம்…!!

ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய  அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார். மேலும் ஒரு முறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊரும் என்று அவர் கூறியதோடு, கைதட்டி பாருங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரஜினிக்கு ஒரு சட்டம்…. விஜய்க்கு ஒரு சட்டமா…? என்ன நியாயம்….? கொந்தளித்த தயாநிதி…. மக்களவையில் சரமாரி கேள்வி…!!

நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன் என்று திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நடைபெற்ற  மக்களவை கூட்டத்தில் திமுக MP தயாநிதி மாறன் பேசியதாவது, நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வரிச்சலுகை மத்திய அரசு அளித்திருப்பது  அற்புதமான ஒன்று. நீங்கள் பட்ஜெட்டில் அளித்த சலுகை நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் அதே தமிழகத்தில் தான் நடிகர் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் நடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”கெட்டது தான் நடக்க வேண்டும்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

முக.ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை முதல்வர் அறிவித்துள்ளார். நம்முடைய மாநிலம் , விவசாயிகளை பாதுகாக்கும் த வகையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு சார்பில் நான்கு நாட்கள் நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வர் அறிவித்தாலே அது கொள்கை முடிவுதான். அமைச்சராக  நிர்வாகத்தில் இருந்த KN நேருவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சித் தேர்தல் – மனு தள்ளுபடி …!!

நகராட்சி , மாநகராட்சி தேர்தலை நடத்த வில்லை என கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் , தமிழக அரசுக்கு எதிராக ஜெய சுகின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நகராட்சி , மாநகராட்சி தேர்தல் நடத்தாதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.

Categories

Tech |