Categories
உலக செய்திகள்

இந்தியா நெருக்கடி கொடுக்கிறது – ட்ரம்ப் பரபரப்பு புகார் …!!

இந்தியா – அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதாக அதிபர் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அங்கு செஞ்ச மாறி இங்கு செய்ய மாட்டோம் – அமித்ஷா உறுதி…!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது போல வடகிழக்கு மாநில சிறப்பு சட்டமும் நீக்கப்படுஎன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். இன்று அருணாச்சலப் பிரதேசம் உருவான நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும் போது வடகிழக்கு மாநில பகுதிகளில்  உண்மையான வளர்ச்சி நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் தான் நடந்துள்ளது. இங்கு சட்டப்பிரிவு 371 விதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.100,00,00,000 செலவு…..”வெறும் 3 மணி நேர செலவு”….. மோடி – டிரம்ப் சந்திப்பு…!!

பிரதமர் மோடி – அமெரிக்கா அதிபர் டிரம்ப் சந்திப்புக்காக 3 மணி நேரத்துக்காக ரூ 100 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தான் – ப.சிதம்பரம் ….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ,உறுதியான பாசன வசதி இல்லாத நிலங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டமே பாதுகாப்பு என்று உணர்ந்து அத்திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது அத்திட்டத்தை பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்து, இப்பொழுது முற்றிலும் குலைக்க முடிவெடுத்திருக்கிறது. இன்சூரன்ஸ் பிரிமியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இனி குறைக்கப்படுகிறது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு இனி பயிர் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை இந்த மாற்றங்களின் விளைவுகள் மிக மோசமாக […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை – அரசின் தீர்மானம் பூஜ்யம் தான் ” மத்திய அரசு வாதம் …!!

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் பூஜ்யம் தான் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் சட்டவிரோதமான காவலில் வைத்துள்ளதாக நளினி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. அதில் , அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். ஆளுநர் தன்னிச்சயாக செயல்பட முடியாது.  தமிழக அரசை ஆளுநர் நடத்துகின்றாரா அல்லது மத்திய […]

Categories
மாநில செய்திகள்

நிறுத்த முடியாது…. ”சட்ட சிக்கல் ஏற்படும்” ஸ்டாலினுக்கு முதல்வர் பதில் …!!

காவேரி டெல்டா பகுதியில் ஏற்க்கனவே உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் ஏற்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவேரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதில் , தஞ்சை , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா பகுதியாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் , கரூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.பாணியில் சாட்டையை சுழற்றிய எடப்பாடியார் ……!!

திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மாவட்ட ஆவின் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தனர். இதனால் கடுப்பான முதல்வர் எடப்பாடி திருச்சி கார்த்திகேயனிடம் இருந்த ஆவின் தலைவர் பதவி அதிரடியாக பறித்து விட்டாராம். நிஜமாகவே புகார் வரும் நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கரூர் , திருச்சி , அரியலூர் விடுபட்டது ஏன் ? ஸ்டாலின் கேள்வி

கரூர் , திருச்சி , அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏன் விடுபட்டடு இருக்கிறது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்த கேள்வி முன்வைத்துள்ளார். தஞ்சை , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வண்டவாளம் தண்டவாளத்தில் எறியுள்ளது – ஸ்டாலின் விளாசல் …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து திமுக , காங்கிரஸ் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை பேசிய முக.ஸ்டாலின் , 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் உச்ச நீதிமன்ற உத்தரவில் சபாநாயகர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்று  நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லவில்லை. முதல்வரை மாற்றவேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்ததற்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த […]

Categories
அரசியல்

BREAKING : மக்கள் தொகை பதிவேடு- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ….!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் . மேலும் மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயகுமார் ,NPR_க்கு மதம் குறித்த தகவலை கொடுக்க வேண்டியதில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு மதம் குறித்த எந்த தகவலையும் கொடுக்க வேண்டியதில்லை,  […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல் …!!

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் அமைக்கப்படுமென்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் , அரியலூரில் 3.85 ஏக்கர் நிலத்தில் ரூ.7.88 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கைபடி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நகரும் நியாய விலைக் கடை” அதிமுகவின் அடுத்த அறிவிப்பு ….!!

நகரும் நியாய விலைக் கடைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜீ பேசும் போது  , திருவிக நகர் தொகுதியில் உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியில் நியாய விலைக்கடை அமைக்க வாய்பில்லை. இதற்கு சொந்தமாக நிலம் வாங்க நிதி ஒதுக்க முடியாது, இது போன்ற பகுதிகளில் அதிக வாடகை கேட்பதால் கூட்டுறவு சங்கத்தால் கொடுக்க முடியவில்லை. எனவே, நகரும் நியாய விலைக் கடைகள் நடத்துவதற்கான சாத்தியங்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காவேரி வேளாண் மண்டலம் : மசோதா தாக்கலாகிறது …..!!

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தற்கான சட்ட முன்வடிவை பேரவையில் வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்கிறார். கடந்த 9ம் தேதி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து நேற்று கூடிய தமிழக அமைச்சரவை இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மேம்படுத்துதல் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காவேரி வேளாண் மண்டலம் ”கொள்கை முடிவு” அடிச்சு தூக்கிய அதிமுக …!!

காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு அமைச்சரவை கொள்கை முடிவு எடுத்துள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : காவேரி வேளாண் மண்டலம் – அமைச்சரவை ஒப்புதல் ….!!

காவேரி வேளாண் மண்டலமாக  கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி […]

Categories
தேசிய செய்திகள்

ஷாகீன்பார்க் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை …!!

டெல்லி ஷாகீன் பார்க் போராட்டக்காரர்களுடன் டெல்லி வழக்கறிஞ்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 67 நாட்களாக இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உச்சநீதிமன்றம் குழு அமைத்து பரிந்துரை செய்தது. இந்நிலையில் ஷாகீன் பாக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 7 பேர் விடுதலை – ‘ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்’ – முதல்வர் உறுதி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று தமிழக முதலவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய துரைமுருகன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் , தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்கள். அதனடிப்படையில் 7 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : ஜனாதிபதியுடன் தமிழக எதிர்கட்சிகள் சந்திப்பு ….!!

தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரச தலைவரை சந்தித்து CAA எதிர்ப்பு கையெழுத்து இயக்க பிரதிகளை வழங்கினர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில்  தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் CAA போராட்டம் நிறைவு …!!

சென்னையில் நடைபெற்ற CAAக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த போரட்டம் நிறைவு பெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனால் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.தடையை மீறி இஸ்லாமிய அமைப்பினர் இன்று காலை 10.30 மணிக்கு போராட்டத்தை தொடங்கினர்.சென்னை  கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் வரை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேரணி  நடந்தது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பிப்.24இல் பெண் குழந்தை பாதுகாப்பு நாள்…. ரூ 2,00,000 உதவி …… முதல்வர் அதிரடி …!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் தமிழக முதல்வர் 110 விதியில் கீழ் பல்வேறு அறிவிப்பை அறிவித்துள்ளார். அதில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியை மாநில பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு  நாளாக முதல்வர் அறிவித்தார். பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதித்தில் கொண்டு அவர்களுக்கு 21 வயதாகும் போது இரண்டு லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுள்ளார்.

Categories
கல்வி மாநில செய்திகள்

JUST NOW : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தொடங்கியது ….!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.  குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : இஸ்லாமியர்கள் முற்றுகை…. சென்னையில் போக்குவத்து மாற்றம் …!!

மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : சட்டமன்ற முற்றுகை….. மாவட்டம் முழுவதும் பேரணி ….. தொடங்கியது ….!!

CAA போராட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தொடங்கியது. மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை தடை விதித்திருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டை போராட்டம் – திமுக வெளிநடப்பு

திமுக இன்றைய சட்ட பேரவை கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , சட்டசபை கூட்டத் தொடரில் தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே சபாநாயகர் சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் , விவாதிக்க வேண்டுமென்று மனு கொடுத்தோம். வண்ணாரப்பேட்டையில் மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீஸ் மீது கல் எறிந்தனர்…. பாட்டில் வீசினர் ….. முதல்வர் விளக்கம் ….!!

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு நேரம் இல்லா நேரத்தில் வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி , ஐயூஎம்எல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : திமுக அனுமதி வாங்கி தர வேண்டும் – முதல்வர் ….!!

வேளாண் மண்டலமாக அறிவததற்கு திமுக அனுமதி வாங்கி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் தொடங்கிய பேரவையில் பேசிய முதல்வர் , அதிமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என திமுக குற்றம்சாட்டியது என்று தெரிவித்த முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது – இரங்கற் குறிப்பு வாசிப்பு …!!

முன்னாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாவித்திரி அம்மாள் , ராஜேந்திர பிரசாத் , குருதி மாவள்ளல்கோன் , பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 ஆண்டு நிறைவு – சாதனை புத்தகம் வெளியீடு ….!!

எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவாகி மூன்றாண்டு சாதனை புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினம் முதல் இன்றுவரை மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய அரசு என்னென்ன சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறது என்பது குறித்து தற்போது 7 புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த மூன்றாண்டுகளில் மொத்தமாக16,382 கோப்புகளில் முதலமைச்சர் பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மக்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அதற்குப் பதிலாக அவர்கள் நஷ்டத்தில் உள்ளனர் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து இருப்பது மிகுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் பாஜக – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியான முறையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால், பாஜக அரசு ஆதரவு பெற்ற மாநிலங்களில் காவல்துறை மூலம் பல நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

போராட்டக் களமான வண்ணாரப்பேட்டை – சிஏஏவை எதிர்த்து இங்கும் ஒரு ஷாகீன் பாக்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளை தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்தத் தடியடியில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய சில நிமிடங்களில் தாம்பரம், ஆலந்தூர், […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கண்டனக் கூட்டத்தில் பழ. கருப்பையா பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் கடற்கரை பள்ளி மைதானத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து அனைத்து முஹல்லா அமைப்பினர் சாா்பில் நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது திடீரென்று தடியடி நடத்த உத்தரவிட்டது யார் ? ஏன் தடியடி நடத்தினார்கள் ? என்ற […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு நாளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிப்பு..!

புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிக்க பாஜக அதிக காலம் எடுத்துக்கொள்வது, தமிழ்நாடு பாஜகவிலுள்ள உட்கட்சி பூசல் குறித்த யூகங்கள் வலுப்பெற உதவின. இருப்பினும் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் உறுதிசெய்யப்பட்டதாகவும், ஓரிரு நாள்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 5 மாதங்களுக்கு முன் தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். 5 மாதங்களுக்கு மேலாகியும், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழ்நாடு முழுவதும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழியில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக திருச்சி, தஞ்சை, புதுகோட்டை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, நாகர்கோவில், கோவை, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, கடலூர், மற்றும் திருப்பூர் போராட்டம் நடைபெறுகிறது. நாகை மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் ‘சுட்டி கெஜ்ரிவால்’

டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன ‘சுட்டி கெஜ்ரிவால்’ வந்து அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அப்போது, கெஜ்ரிவால் போல் வேடமிட்ட சுட்டிப் பையனின் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டானது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி இந்த ‘சுட்டி கெஜ்ரிவாலுக்கு’ ஆம் ஆத்மி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதுவிதமான அரசியல் சகாப்தம் தொடங்கிவிட்டது – கெஜ்ரிவால்

வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியல் சகாப்தம் தொடங்கிவிட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

‘இது எனது வெற்றியல்ல, டெல்லி மக்களின் வெற்றி’: கெஜ்ரிவால் உருக்கம் ..!!

இது தனது வெற்றியல்ல, டெல்லி மக்களின் வெற்றி என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தனது பதவியேற்பு விழாவில் தெரிவித்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் தனது சமஸ்தானத்தை மூன்றாவது முறையாக நிறுவுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ராம்லீலா மைதானத்தில் அம்மாநிலத்தின் ஜனநாயக சக்ரவர்த்தியாக இன்று அவருக்கு மக்கள் முன்னிலையில் முடிசூட்டப்பட்டது. எதிரணிக்கு மன்னிப்பு : தனது பதவியேற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் சுமூகமான ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன். தலைநகர் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

அமித் ஷாவுக்கு, ‘மூன்று யோசனை’ அளித்த திக்விஜய் சிங்

நாட்டில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மூன்று யோசனைகளை அளித்துள்ளார். இதை நிறைவேற்றாதப்பட்சத்தில் மோகன் பாகவத் பேச்சைக் கேட்டு பதவி விலகுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதனை சட்டமாக்கியுள்ளது. இந்த திருத்தச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிலுள்ள இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது. ஷாகீன்பாக் போராட்டம் இந்தச் சட்டத்துக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத ரீதியான பிரிவினையை காந்தி ஏற்றுக் கொண்டதில்லை… பிரணாப் முகர்ஜி பேச்சு

மத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பர், “காந்தியின் இந்துக் கோட்பாடு;ஜின்னாவின் இஸ்லாம் போராட்டம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தில்லியில் வெளியிட்டு பிரணாப் முகர்ஜி அண்மையில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தனது பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவின் ஒற்றுமைக்காக போராடினார். மதரீதியில் இந்தியா பிரிவதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. தனது முழு வாழ்க்கையையும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக அர்ப்பணித்தவர்.அவர் நமது நாட்டின் தேச தந்தைமட்டுமல்ல. இந்த நாட்டையே உருவாக்கியவர். […]

Categories
தேசிய செய்திகள்

ஏமாற்றி வரும் அம்பானி நிறுவனம்… நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ..!!

அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல்’ நிறுவனம், குறித்த நேரத்தில் கப்பல்களை கட்டித் தராததால், அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்று ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட்’ RelianceNaval and Engineering Limited (R-Naval) எனப்படும் கப்பல் கட்டும் நிறுவனமாகும். சுருக்கமாக ‘ஆர்- நேவல்’ என்று அழைக்கப்படுகிறது.  இந்த நிறுவனத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை, கடந்த 2011-ஆம் ஆண்டுரூ. 2500 கோடி மதிப்பிலான, 5 ரோந்துக்கப்பல்களை […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால்!

மூன்றாவது முறையாக முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இன்று டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். இதற்காக ராம்லீலா மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தவிர மற்ற […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் – ஜி.கே. மணி வரவேற்பு

பாமக மாவட்ட நிர்வாகிகள் வளர்ச்சிக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நீர்ப்பாசன நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான பாதுகாப்பு சமூக […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் – வசந்தகுமார் எம்பி தாக்கு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் என்றும், அதில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் வசந்தகுமார் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட், தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. மாமல்லபுரத்திற்கு சீன அதிபரும் பிரதமரும் வந்த காரணத்திற்காக பணம் ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், பாரம்பரியமிக்க கன்னியாகுமரியில் சுற்றுலாத் திட்டங்களை நிறைவேற்ற பணம் ஒதுக்கீடு செய்யாதது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தின் 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ராமநாதபுரத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 690 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இப்பட்டியலை வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், ‘தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அன்னா ஹசாரேவை அழைக்காத கெஜ்ரிவால்..!

டெல்லியில் இன்று காலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுக்கவில்லை. கடந்த முறை முதல்வராக பதவியேற்றபோது, அழைப்பு விடுக்கப்பட்டநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அன்னா ஹசாரே பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து, பலமுறை அரவிந்த் கெஜ்ரிவால் தொலைபேசியில் பேச முயன்றும், அன்னா ஹசாரே அதனை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேச முயன்றபோது, அவர் ஊடகங்களுடன் பேச விரும்பவில்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சசி தரூரின் அவதூறு வழக்கு: மத்திய சட்ட அமைச்சருக்கு சம்மன்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கின் குற்றவாளி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்தான் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசி தரூர், ரவி சங்கர் பிரசாத் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினிகாந்த் பாஜகவின் வசன வாசிப்பாளர்’ – ஜவாஹிருல்லா

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் வசனத்தை படிப்பவர்தானே தவிர இஸ்லாமியர்கள் குறித்து அவருக்கு எந்த கரிசனமும் கிடையாது என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “வண்ணாரப்பேட்டையில் அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். வீடியோக்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ – கே. பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை மேற்கொண்டுள்ள தடியடி கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேற்று இரவு சென்னையில் அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளது’ – தமிமுன் அன்சாரி

தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளதாக தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார். திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்துவருகிறது. அதனால் பாஜக அரசு பிடிவாதம் பிடிக்காமல் அச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். போராட்டத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் இணைந்து போராடுவது ஆறுதல் […]

Categories
மாநில செய்திகள்

‘ரஜினிக்கு செல்வாக்கு இருப்பதால் விமர்சனத்திற்கு ஆளாகிறார்’ – செ.கு. தமிழரசன்

ரஜினிக்கு செல்வாக்கு இருப்பதால் தான், அவரது கருத்துகள் அரசியல்வாதிகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது செ.கு. தமிழரசன் கூறினார். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் தலைமை வகித்தார். அதற்கு முன்னதாக செ.கு. தமிழரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றோடு ஒன்று சார்ந்து உள்ளது. […]

Categories

Tech |