Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இனிமேல் நான் அமைச்சர் இல்ல தலைவர்” பாஜகவின் தலைவராக ஜெயப் பிரகாஷ் நட்டா…!!

பாஜகவின் அடுத்த தலைவராக அமைச்சரவையில் இடம் கிடைக்காத  ஜெயப் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யபட இருப்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி பிடித்தது . நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கடந்த முறை பதவி “இந்த முறை அம்போ” பாஜகவின் முக்கிய தலைகள்…!!

நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அவருடன் சேர்த்து பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களுடன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வும் பதவி ஏற்றார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” மம்தாவுடன் மோதும் பாஜகவினர்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அம்மாநில முதல்வரிடம் ஆக்கட்சியினர் மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா […]

Categories
அரசியல்

பிஜேபியை “பீப் ஜனதா பார்ட்டி” என்று மாற்றிய ஹேக்கர்கள்…..!!

மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற நிலையில் ஹேக்கர்கள் பாஜகவின் டெல்லி இணையத்தை ஹேக் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.இதற்கிடையே பாஜகவின்  டெல்லி இணையதளம் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் அந்த இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி ,  மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளின் புகைப்படம்  பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை ஹேக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “கைதட்டி மகிழ்ந்த மோடியின் தயார்” வைரலாகும் புகைப்படம்..!!

மோடியின் பதவி ஏற்பு விழாவை TV கண்டு மகிழ்ந்த அவரின் தயார் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவை தனது வீட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் தயார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2_ஆவது முறையாக மோடி” இந்தியா கண்ட 15 பிரதமர்கள் பட்டியல்…!!

இதுவரை இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் குறித்தும் அவரின் ஆண்டு குறித்தும் காண்போம்.  இந்திய நாட்டின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 23_ஆம் தேதி எண்ணப்படட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றி ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்றுள்ளது. பாஜகவின் 17-வது புதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய மத்திய அமைச்சரவை” 24 கேபினட் , 25 இணை அமைச்சர்கள் பட்டியல்…!!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அதே போல அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு 25 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 24  இணையமைச்சர்கள் பெறுப்பேற்றுக்கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் […]

Categories
அரசியல்

பதவியேற்றார் மோடி ..!! 17வது பிரதமருடன் அமைச்சர்கள் பதவியேற்பு ..!!

தொடர்ந்து 2 வது முறையாக குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்துவைக்க பதவியேற்றார் நரேந்திர மோடி . டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திர மோடியை பிரதமராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இந்தியாவின் 17-வது பிரதமராகவும், தொடர்ந்து இரண்டாவது  முறையாகவும் மோடி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், இந்திய தேசிய கட்சி தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எட்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக_வில் சலசலப்பு “மகனுக்கு பதவி” OPS மீது கடுப்பில் EPS அணி…..!!

தனது செல்வாக்கை பயன்படுத்தி OPS தனது மகனுக்கு பதவி வாங்கியுள்ளார் என்று அதிமுக_விற்க்குள் முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் ஏற்கனவே நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் வைத்தியலிங்கம் அதிமுக_வின் நிர்வாகியாக இருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சார்பில் தேனி மக்களவை தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்.மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது.அமைய இருக்கும் மத்திய அமைச்சரவை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி தனது […]

Categories
அரசியல்

மோடி சர்க்காரை பின்னுக்கு தள்ளிய நேசமணி ..!!

modisarkar என்ற ஹாஷ்டேக் ஐ பின்னுக்கு தள்ளி நேசமணி ஹாஸ்டேக் ஆனது  ட்ரெண்டிங்கில் வளம் வலம்வந்து கொண்டு இருக்கிறது  வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு  தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார். இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “டெல்லியியை நோக்கி தலைவர்கள்” பலத்த பாதுகாப்பு…!!

மோடி பதவியேற்பையடுத்து தலைநகர் டெல்லியில் பல்வேறு தலைவர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை பதவி ஏற்க  இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையின் முகப்பு பகுதியில் இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் புதிய அமைச்சரவையில் 70 அமைச்சர்கள்…..!!

பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் 65 முதல் 70 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அதே போல பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வராகிய ஜெகன்மோகன்” இந்தியளவில் ட்ரெண்டிங்…..!!

ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதையடுத்து ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 12.30 மணிக்கு விஜயவாடா இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் அதிரடி முடிவாக மது விலக்கு […]

Categories
அரசியல்

விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ்க்கு தடை..!!

ஒருமாத காலத்திற்கு விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்ளது . நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மற்ற தலைவர்களை போல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் முடிவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டாம் என்று ரஜினி, ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல்

நடிகர்கள் அரசியலில் குதிப்பது ஏன்..??, ரஜினிக்கு சீமான் அறிவுரை ..!!

மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தொடர்ந்து 5_ஆவது முறையாக முதல்வர்” பொறுப்பேற்றார் நவீன் பட்நாயக்…!!

ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5_ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலோடு சேர்த்து ஆந்திர , ஒடிசா போன்ற மாநிலங்களின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும்  பிஜூ ஜனதாதளம்  112 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 5_ஆவது முறையாக வெற்றி பெற்றது. அதே போல மக்களவையில் உள்ள 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டசபையில்  பிஜூ ஜனதாதளம் வெற்றியை தொடர்ந்து அக்கட்சியின் சட்டசபை தலைவராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MLA_வாக பதவியேற்ற 9 பேர் “தப்பியது அதிமுக அரசு” பெரும்பான்மை கிடைத்தது..!!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக_வின் 9 வேட்பாளர்கள் MLA_வாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில்  , அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக_வின் இந்த வெற்றியால் அரசுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக சட்ட பேரவையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் வெற்றிபெற்ற அதிமுகவின் 9 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சரை நியமிப்பதில் குழப்பம் “பாஜக தீவிர ஆலோசனை..!!

தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களாக யார் யாரெல்லாம் நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாஜக தலைவரான அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் பாஜக தலைவர் பதவியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவியிலிருந்து விலக வேண்டாம்” முக ஸ்டாலின் வேண்டுகோள்..!!

ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே வென்று மோசமான தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்க்கு காங்கிரஸ் செயற்குழு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தும்  ராகுல் காந்தி பதவி விலக கூடாது என்று கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராகுல் பதவி விலகக்கூடாது” ரஜினி கூறியது மகிழ்ச்சி- கே.எஸ். அழகிரி..!!

ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்று ரஜினி கூறியது மகிழ்ச்சியளிப்பதாக  கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக  வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் உள்ள  இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  ரஜினி காந்த், காங்கிரஸ் பழமையான கட்சி. அந்த கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை கையாள்வது இளையவரான ராகுல் காந்திக்கு கடினம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தலில் கணிசமான வாக்குகள்” கமலுக்கு ரஜினி வாழ்த்து..!!

தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகாமல் நின்று நிரூபிக்க வேண்டும்” ராகுல் குறித்து ரஜினி கருத்து..!!

ராகுல் பதவி விலகாமல் நின்று நிரூபித்து காட்ட  வேண்டும் என்று  ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இந்த படு தோல்வியால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். அதே போல காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக முன் வந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மோடியின் தலைமைக்கு கிடைத்தது” வெற்றி குறித்து ரஜினி கருத்து..!!

மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக வெற்றி குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் பரபரப்பு” சசிகலாவுடன் ஆலோசனை நடத்தும் டிடிவி…!!

டிடிவி தினகரன்  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும்  வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும்  குறைவான வாக்குகளையே பெற்றது. அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் “Wait And See” ஸ்டாலின் பேட்டி…!!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்    திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் பதவி ஏற்பு   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இதனால் தமிழக சட்ட மன்றத்தில் 88 ஆக இருந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி” தொண்டர்களிடையே பிரதமர் பேச்சு…!!

தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி தேர்தல் பனி செய்துள்ளதாக பிரதமர் மோடி வாரணாசியில் தொண்டர்களிடம் பேசியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலின் பேச்சு, ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை” சிவசேனா விமர்சனம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை  வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த   2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என […]

Categories
தேசிய செய்திகள்

வாரணாசியில் பிரதமர் மோடி “வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்பு”

வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த பிரதமர்  மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வாக்களித்த மக்களுக்கு நன்றி” வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி …..!!

மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தேர்தலில் காங்கிரஸ் தோல்வி” 10 நாட்களுக்குள் நடவடிக்கை…!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களுக்குள்  நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இதையடுத்து இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து  விவாதிப்பதற்காக கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் செயற்குழு […]

Categories
தேசிய செய்திகள்

“நேருவின் நினைவு தினம்” சோனியா , ராகுல் அஞ்சலி செலுத்தினர்….!!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பு வகித்த  ஜவஹர்லால் நேரு  1964_ஆம் ஆண்டு மே  மாதம் 27_ஆம் தேதி காலமானார். நேரு காலமான நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று  நேருவின் 55-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியில் இருக்கும் அவரின்  நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் “கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு” ஆட்டத்தை தொடங்கும் பாஜக…!!

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் மீண்டும் கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அம்மாநில பாஜக ஈடுபட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எந்த தியாகமும் செய்ய தயார்”  நீங்கள்தான் எனது குடும்பம் , எனது சொத்து…சோனியா மக்களுக்கு கடிதம்…!!

எந்த தியாகமும் செய்ய தயார்  நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து என்று சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. தேசியளவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்த்தர். இப்படி மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி” நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் நன்றி..!!

கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி என்று  கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான்   எனது முதல் கடமை என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு ஏராளமானோர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக  தமிழக பாஜகவின் ட்விட்டரில், இது தான் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாளை MLA பதவி ராஜினாமா” குறைகின்றது திமுக கூட்டணி MLA_க்கள் பலம்….!!

திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதால் திமுக_வின் MLA_க்கள் பலம் குறைகின்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பாதுகாத்துக் கொண்டது. திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய MLA_க்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும்” தோல்வி குறித்து TTV கருத்து…!!

 அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட  அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“300 பூத்களில் 0 வாக்கு” முகவர்கள் போட்ட வாக்கு எங்கே..? TTV தினகரன் கேள்வி….!!

300 பூத்களில் அமமுக_விற்கு எந்த வாக்கும் விழவில்லை என்றால் வாக்குசாவடியில் எங்களின்  முகவர்கள் போட்ட வாக்கு எங்கே என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ப்தி […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“எப்போது பதவியை ராஜினாமா செய்யுறீங்க” அமைச்சரை சாடும் செந்தில் பாலாஜி…!!

எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது” வெற்றி குறித்து முக.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்…!!

மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவு தேசியளவில் பாஜகவிற்கு சாதகமாகவும் , தமிழகத்தில் திமுக_வுக்கு சாதகமாகவும் இருந்தது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் ஓன்று கூட வெற்றி பெற வில்லை. திமுக கூட்டணி போட்டியிட 38 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. இத வெற்றியை திமுக_வினர் கொண்டாடி வருகின்றனர். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக சந்திக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“சபரிமலை காரணமில்லை” தோல்வி குறித்து கேரள முதல்வர் கருத்து…!!

கம்யூனிஸ்ட்களில் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை என்று கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவு கடந்த 23_ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் அசுர வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் படு தோல்வியடைந்தது. இடதுசாரிகள் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம் , திரிபுராவில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . அதே போல கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வேட்பாளர்களாக மாறிய விவசாயிகள்” தோற்கடிக்கபட்ட முதல்வர் மகள்….!!

தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள  17 தொகுதிகளில் 9 இடங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு” 30_ஆம் தேதி முதல்வராகும் ஜெகன்மோகன் …..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற  YSR காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆட்சியமைக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமைச்சராகும் தமிழ்ப்பட நடிகை” தொடர்ந்து 2_ஆவது முறை வெற்றி….!!

பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“303 இடங்களில் பாஜக முதலிடம்” தேசியளவில் 3_ஆம் இடம் பிடித்த திமுக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்ற பாஜக தேசியளவில் முதல் கட்சியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு குறித்து நேற்று இந்திய தலைமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ராஜினாமா…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு..!!

பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி வழங்கினார். பாராளுமன்ற  தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க  272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமாக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மட்டும்   23 இடங்களில் வெற்றி பெற்று  3-வது இடத்தை பிடித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று வாக்கு  எண்ணப்பட்டது. இதில் பாஜக ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  349 தொகுதிகளை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு கனட பிரதமர் ஜஸ்டின் வாழ்த்து..!!

மக்களவை தேர்தலில் மாபெரும்  வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனட பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு  நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா  கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில்  வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குளம் குட்டையில் மலரும் தாமரை” தமிழகத்தில் மலராது…. திருமாவளவன் விமர்சனம்….!!

தாமரை குளம் , குட்டையில் மலரும் தமிழகத்தில் மலராது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக   தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories

Tech |