Categories
அரசியல் மாநில செய்திகள்

வாங்கிய கடனை செலுத்தாதலால் “விஜயகாந்தின் வீடு ஏலம்” IOB அறிவிப்பு ….!!

வாங்கிய கடனை கட்டாததால் நடிகர் விஜயகாந்தின் வீட்டை ஏலம் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் நடிகராக இருந்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு வந்ததும் சினிமைவை கைவிட்டார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானமாக வைத்து இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடன் வங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் வாங்கிய கடனுக்கான வட்டி என்று எதுவுமே செலுத்தாத நிலையில் இன்று விஜயகாந்தின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது……!!

குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , வேலுமணி  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றது. கடந்த 7 நாட்களுக்கு முன்பாக நடைபெற வேண்டிய இந்த கூட்டம் இன்று நடைபெறுகின்றது . இதில் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் எப்படி இருக்கின்றது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

28_ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகின்றது….!!

வருகின்ற 28_ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகின்ற அறிவிப்பை தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து 13 சட்டமன்ற தொகுத்திருக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் 13 இடங்களில்  தி.மு.க.வும், 9 இடங்களில்  அ.தி.மு.க. வும் வெற்றி வெற்றி பெற்று நூலிழையில் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது . அதிமுக ஆட்சி பெருன்பான்மையுடன் இருக்கின்ற சூழலில் தமிழக சட்டசபை கூட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி  மாதம் கூடிய தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் கடலூர் மாநில செய்திகள்

“ரஜினி முதல்வராக வேண்டும்” சிதம்பரம் கோயிலில் சிறப்பு யாகம் …!!

2021_இல் ரஜினிகாந்த முதல்வராக வரவேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அண்ணா , கலைஞர் , MGR மற்றும் ஜெயலலிதா என அனைவருமே கலைத்துறையில் சாதித்தவர்கள் . அவர்கள் அரசியலிலும் ஜொலித்தார்கள். இவரை போல நடிகர் விஜயகாந்த் , சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களால் கணிசமான வாக்குகளே பெற முடிந்தது. இந்நிலையில் சமீப காலமாக அரசியலுக்கு எப்போது வருவாரா , எப்போது வருவார் […]

Categories
தேசிய செய்திகள்

“முத்தலாக் தடை மசோதா” மக்களவையில் இன்று தாக்கல் …!!

முத்தலாக் சட்ட மசோதா மீண்டும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. முஸ்லீம் மதத்தில் கணவன் அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அடுத்தடுத்து ‘தலாக்’ என்று  3 முறை கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முஸ்லீம் மத சட்டத்தை தடை செய்யும் நோக்கத்தில் மோடியின் முந்தைய கால ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது முத்தலாக் சட்ட மசோதா. இதற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற சட்டம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

பள்ளியில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி…… செங்கோட்டையன் பேட்டி …!!

பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு ஒரு நாள் யோகாசன பயிற்சி அளிக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் யோகாசங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர். பின்னர் செய்தயாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சர்வதேச யோகா தினம் : செங்கோட்டையன் , தமிழிசை பங்கேற்பு …!!

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் , பாஜக மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற யோகா தினத்தை பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யோகாசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.நாட்டின் பல்வேறு இடங்களிலும் , பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நேரடி எதிர்ப்பு கிடையாது” ஒரே தேர்தல் முறை குறித்து ராஜ்நாத் சிங் பேட்டி…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த நேரடி எதிர்ப்பு கிடையாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒரே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறை” குழு அமைப்பதாக மோடி கருத்து ….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள சிக்கலை ஆராய்வதற்கு குழு அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றத்துக்கும்  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யக்கூடிய  ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து வருகின்றது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றுக்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி  தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல்  காங்கிரஸ் , திமுக  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் தண்ணீர் பஞ்சம்…. ஜூன் 22_ஆம் தேதி முதல் போராட்டம் ….ஸ்டாலின் அறிவிப்பு …!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் ஜூன் 22_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

“நல்ல நண்பர் ராகுலுக்கு” பிறந்த நாள் வாழ்த்து – மு.க ஸ்டாலின்..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும்  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள் ராகுல் காந்திக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைவர் மு.க ஸ்டாலின் ராகுல் காந்திக்கு  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”ஆலோசனையில் அதிமுகவிற்கு அனுமதி மறுப்பு….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக_வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ மீது தேச துரோக வழக்கு” ஜூலை 5_ஆம் தேதி தீர்ப்பு …!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீதி பதியப்பட்டுள்ள தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5_ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2009_ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேசத் துரோக வழக்க்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுவாகவும் ,  மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரசியல் கட்சி MLA போன்றோரை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

“பா.ரஞ்சித் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் “அமைச்சர் கருத்து..!!

ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் அவர்கள் பேசியது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பா ரஞ்சித் அவர்கள் பேசினார். அதில் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று அவர் பேசி இருந்தார். இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும், ராஜராஜ சோழனின் ஆதரவாளர்களும் பா.ரஞ்சித்தின்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவந்தனர். இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் பாலமாக செயல்படுவார்” ஓம் பிர்லா குறித்து மோடி புகழாரம் …!!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவையின்  சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு…!!

மக்களவையின்  சபாநாயகராக பாஜக ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாம் நாளான நேற்று மீதம் இருந்த புதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி….!!

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “  ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே தேர்தல் நடத்த மோடி தலைமையில் ஆலோசனை…மம்தா புறக்கணிப்பு ….!!

ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெறும் அஆலோசனை கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார் பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி, ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘ஒரே தேர்தல் முறை’ அனைத்து கட்சித்தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை…..!!

ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்த இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வின் துரைமுருகன் அப்பல்லோ_வில் அனுமதி….!!

திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற எதிர்க்கட்சி கூட்டம்” சோனியா அழைப்பு…!!

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின்  முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி , ராஜ்நாத்சிங் உள்பட  313 பேர் MP-யாக பதவியேற்ற […]

Categories
அரசியல்

“தமிழை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் “கவிஞர் வைரமுத்து கருத்து ..!!

தமிழை ஆட்சி மொழியாக மாற்ற முழுமூச்சோடு பயணிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பிகளுக்கான பதவியேற்பு விழா இரண்டாவது நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதில் இன்றைய நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற அனைவரும் தமிழ்மொழியிலே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும் பதவிப்பிரமாணத்தின் இறுதியில் தமிழ் வாழ்க என்ற முழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி அனைவரிடமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பேமானித்தனம்” முதல்வர் , பிரதமர் என்று பாராமல் ஆவேசமான தமிழ் நடிகர்…!!

பேமானித்தனம் பண்ணி முதல்வர் , பிரதமர் ஆகிவிட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மண்சசூரலிகான் கடுமையாக வசைபாடியுள்ளார்  தமிழகத்தில் தண்ணீர் உட்பட பல பிரச்சனைகள் இன்று விவாதிக்க கூடிய விஷயமாக இருக்கின்றது. அணுக்கழிவு கிடங்கு அமைப்பு விவகாரம் , ஹைட்ரோ கார்பன் , மீத்தேன் வாயு போன்ற இயற்க்கை வளங்கள் பாதிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஆளும் அதிமுக அரசும் , மத்திய பாஜக அரசும் முனைப்பு காட்டி வருகின்றது. தமிகத்திற்கு எதிரான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கையெழுத்திடாமல் சென்ற ராகுல்…. நினைவுபடுத்திய ராஜ்நாத் சிங் ……!!

வயநாடு MP_யாக பதவியேற்ற பின் ராகுல் காந்தி கையெழுத்திடாமல் சென்றதை பார்த்த ராஜ்நாத் சிங் கையெழுத்திடுமாறு நினைவூட்டினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று  17-வது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வை சமாளித்தலும் , அதிமுக_வை சமாளிக்க முடியவில்லை… அதிமுக MLA குமுறல் ..!!

எதிர்கட்சியினரை கூட சமாளித்து விடலாம் ஆனால் நம் கட்சியினரை சமாளிக்க முடிய வில்லை என்று MLA தோப்பு வெங்கடாச்சலம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதே சமயம் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியால் இந்த ஆட்சி தப்பியது. அதோல்வியையடுத்து அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளை அதிமுக MLA-க்கள் கிளப்பினார். இதையடுத்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை யாரும் பொது வெளியில் பேச கூடாது என்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதிய சபாநாயகராக மேனகா காந்திக்கு வாய்ப்பு…..!!

மக்களவையின் புதிய சபாநாயகராக மேனகா காந்தி தேர்ந்தெடுக்கப்படலாமென்று தகவல் வெளியாகிள்ளது. மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மக்களவை புதிய சபாநாயகருக்கான தேர்தல் வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.இதனால் 17_ஆவது மக்களவையின் சபாநாயகர் யார் என்ற கேள்வி அரசியல் விவாதங்களில் எழுந்து வருகின்றது. பல்வேறு தரப்பினர் பல விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

19_ஆம் தேதி சபாநாயகர் தேர்தல்….மீண்டும் பெண் தலைவருக்கே வாய்ப்பு…!!

நடைபெறும் மக்களவை சபாநாயகருக்கான தேர்தலில் இந்த முறையும் பெண் தலைவருக்கே வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின்  முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்தல் வருகின்ற  19_ஆம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம்……!!

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமாருக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  17-வது நாடாளுமன்ற மக்களவையின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜம்மு_வில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தல்” குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் …!!

ஜம்மு காஷ்மீரில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று  மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து  கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மதிப்புமிக்க யோசனைகள்” நன்றி கூறி பிரதமர் மோடி ட்வீட் …!!

மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து  கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகின்றது….!!

இன்று மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் புதிய மக்களவையின் முதல் கூட்டம் நடைபெறுகின்றது.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  முதல் முறையாக  17-வது நாடாளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக உரிமைகளை “டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி” விளாசிய ஸ்டாலின்…!!

முதல்வர் பழனிசாமி தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கொதித்தெழுந்துள்ளார்.   டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.   இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

முதல்வர் பழனிசாமி, சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்   டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் […]

Categories
மாநில செய்திகள்

“கோதாவரி – காவிரி நதிநீர்” இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில்முதல்வர் பழனிசாமி, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை […]

Categories
மாநில செய்திகள்

தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த முக.ஸ்டாலின்….!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்த்தை டிவீட்டரில் தெரிவித்துள்ளார். தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் பல்வேறு  நாடுகளில் ஜூன் மாதத்தின் 16_ஆம் தேதி  இந்த தினம் கொண்டாப்படுகிறது. இதையடுத்து அனைவரும் தங்களின் தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தந்தையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில் , அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்….தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். […]

Categories
தேசிய செய்திகள்

 2022-ல் “விவசாயிகளின் வருமானம்” இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் – பிரதமர் மோடி..!!

நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது” முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்..!!

தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று ஜலசக்தித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்  நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்திடம் அனுமதி வாங்க அவசியமில்லை” ஜலசக்தித்துறை அமைச்சரிடம் குமாரசாமி மனு..!!

கர்நாடக முதல்வர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம்  கோரிக்கை வைத்துள்ளார்  நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமியும் டெல்லி வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி சென்றுள்ள  முதல்வர் குமாரசாமி  ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில் முதல்வர் பழனிசாமி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் பழனிசாமி..!!

டெல்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக_வில் இணைந்த அமமுக_வினர்” செய்வதறியாது திணறும் நிர்வாகிகள்…!!

நெல்லையை சேர்ந்த அமமுக_வினர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.  தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. மக்களவையில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வெறும் ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வென்றது. அதே போல 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியும் , அதிமுக 09 தொகுதியும் கைப்பற்றியது.இந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட TTV தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மற்ற மொழிகளை கற்பதில் எந்த தவறுமில்லை” பிரேமலதா கருத்து…!!

மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் எந்த தவறுமில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்தி கட்டாயமில்லை என மத்திய அரசு பின் வாங்கியது. இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரமேலதா செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்கு வங்கி குறையவில்லை “உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி” பிரேமலதா உறுதி…!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக_உடனான கூட்டணி தொடருமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கூட்டணி படு தோல்வி அடைந்தது. அதிமுக கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிட்ட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக_வும் பெரிதாக வாக்கு வாங்கவில்லை. கடந்த தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தல் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சீமான் நுழைய தடை …. நெல்லை போலீஸ் அதிரடி ..!!

நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய சீமானுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர் . சில நாட்களாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், இடதுசாரி இயக்கங்களும் அணுக்கழிவு  மையம் அமைப்பதை தடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அழிவு மையமானது கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ள கிராம பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ள நிலையில்,நாம் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக முன்னாள் MP சிவ சுப்பிரமணியன் மரணம்” அதிர்ச்சியில் திமுகவினர்..!!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவ சுப்பிரமணியன். இவர்  1989-ம் ஆண்டு ஆண்டி மடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் 1998- 2004-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது திமுவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அரியலூர் திமுக மாநிலங்களவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தப்பியது அதிமுக, குறைந்தது திமுக” நிம்மதியில் EPS ,OPS …!!

விக்கிரவாண்டி MLA  ராதாமணி மரணத்தையடுத்து சட்டசபையில் திமுக பலம் மீண்டும் குறைந்துள்ளது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக கூட்டணி 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் 97_ஆக இருந்த தன்னுடைய பலத்தை 110_ஆக அதிகரித்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திமுக கூட்டணியின்  பலம் தமிழக சட்டசபையில் திமுக 102 + காங்கிரஸ் 7 என 109_ஆக குறைந்து. […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டதில் கலந்து கொள்ள இன்று டெல்லி செல்கிறார் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அந்த பயணத்தை முடித்த பின் இந்தியா திரும்பிய பிறகு  நாளை (சனிக்கிழமை) நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

“திமுக MLA தீடிர் மரணம்” அதிர்ச்சியில் நிர்வாகிகள்…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்  ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி  சட்டமன்ற தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள  கு. ராதாமணி உடல் நலக்குறைவின் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த கு. ராதாமணி சிகிச்சை பலனளிக்காமல்  காலமானார். இவரின் மரணத்தால் திமுக_வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் திமுக தலைமை கழகம் சார்பிலும் , திமுகவின் […]

Categories

Tech |