Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TIKTOKகிற்கு தடை…. பேரவையில் அமைச்சர் மணிகண்டன் பேச்சு…!!

தமிழகத்தில் TIKTOK செயலியானது உறுதியாக தடை செய்யப்படுமென அமைச்சர் மணிகண்டன் பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததை அடுத்து கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன்,சமீபகாலமாக TIKTOK செயலி மூலம் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், கலாச்சார சீர்கேடு நிகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய வீடியோக்களை கண்காணிக்க சிறப்பு […]

Categories
அரசியல்

பழமையான 141 சட்டங்கள் நீக்கம்….பேரவையில் சட்ட மசோதா தாக்கல் …!!!

தமிழகத்தில் பழமையான மற்றும் பயன்படாத 141 சட்டங்களை நீக்குவதற்கான  சட்ட  மசோதாவை  அமைச்சர் சிவி ஷண்முகம்  பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்,தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை  பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நூலகமாக மாறும் 45 அரசு பள்ளிகள்…. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு …!!

ஒரு மாணவர்கள் கூட சேராத  45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

“இனி தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டம்” அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..!!

தென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது முதல்நிலை நகராட்சியாக தென்காசி உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்பதால் ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கைக்கு பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு… கர்நாடக காங்கிரஸ் ….!!

அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கர்நாடக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கர்நாடக அரசியலில்  கடந்த 2 வாரமாக உச்சகட்ட தொடர் குழப்பங்கள் நீடித்து வந்தது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக_விற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். MLA_க்களின் ராஜினாமாவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தான் காரணம் என்று ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். MLA_க்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டு “வாடகை ஒப்பந்தம்”120 நாட்களாக நீட்டிப்பு…பேரவையில் OPS அறிவிப்பு…!!

வீட்டு வாடகை ஒப்பந்தங்களை மேற்கொள்ள கால அவகாசத்தை நீட்டிக்கும்  சட்டத் திருத்த மசோதாவை  சட்டப்பேரவையில் O.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்றைய சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் துணை முதலமைச்சர் O.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சொத்து உரிமையாளரும், வாடகைதாரரும் வாடகை ஒப்பந்தங்களை எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் அன்பழகனையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்…. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பேச்சு..!!

பேரவையில் இன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களை நினைவில் கொள்ளுமாறு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்து பேசினார். சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசத் தொடங்கும் முன்பு கலைஞர்,திமுக தலைவர் ஸ்டாலின்,இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பேசத் தொடங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று செய்தித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எடியூரப்பாவிற்கு என் மீது கருணை ஏற்பட்டுள்ளது” முதல்வர் குமாரசாமி …!!

எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.  இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதலைமைசர் குமாரசாமி ,  தனது அரசு மீது நம்பிக்கை கோரி பேசும் போது ராஜினாமா செய்த MLA_க்கள்  சுயமரியாதை இல்லாதவர்கள், சபாநாயகரின் அதிகாரத்தை கேள்விகுறியாக்கும் வகையில் செயல்படுகின்றனர். கர்நாடகவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய குமாரசாமி , கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் தேர்தல்”மொத்தம் 48 பேர் போட்டி..வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு…!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டிடுவதற்கான வேட்பு  மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் அதிமுக, திமுக, மற்றும் நாம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கர்நாடக சட்டசபையில் அமளி” மாலை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்…!!

கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட அமலியால் மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநில முதலவர் குமாரசாமி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசினார். அதில் இந்த ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்திலேயே கடும் அமளி ஏற்பட்டது. இதைதொடர்ந்து பேசிய சபாநாயகர்  ரமேஷ் குமார்  கூறுகையில் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வழக்கு… ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி..!!

வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட்டதாக கூறி அப்போதைய ஆட்சி காலத்தில் இருந்த திமுக சார்பில் ஆயிரம் விளக்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி, வழக்கின் மீதான விசாரணை முடிவில்  வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பு…..!!

உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குக்களின் தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மொழிகளின் தொன்மையான மொழி , செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கண்டனம்  தெரிவித்தனர். மேலும் தமிழிலும் தீர்ப்பை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின்  […]

Categories
மாநில செய்திகள்

புதியவரி மசோதா தாக்கல்”உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்” பொதுமக்கள் கவலை…!!

புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதால்  ஆம்னி பேருந்துக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்ட பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும் , படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு  ரூ.2,500 வரியும் என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில்  தாக்கல்  செய்தார். இதனால் இனி வரும் காலங்களில் ஆம்னி பேருந்துக்கான கட்டணம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டம்- குமாரசாமி காரசார பேச்சு..!!

ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுவதாக  குமாரசாமி காரசாரமாக தெரிவித்துள்ளார்.   கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ் குமார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் படி உத்தரவிடக்கோரி 15 எம் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி விவகாரம் …. மத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல் …..!!

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பாக தொடர்பாக மத்தியஸ்த்தர் குழு தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படடமால் இருக்க திமுக தான் காரணம்…அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!!

உள்ளாட்சி தேர்தலை விரைவில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,கடம்பூர் ராஜு,பெஞ்சமின் ஆகியோர் தியாகி சங்கரலிங்கனார், ஆர்யா என்கின்ற பாஷம் செண்பகராமன் ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை என்றால் தமிழக அரசுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஆகையால் தேர்தல் நடத்தக்கூடாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாப நோக்கமின்றி மக்களுக்காக பேருந்துகள் இயக்கம்…. பேரவையில் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் பேச்சு…!!

குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்தவித லாப நோக்கமின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சட்ட பேரவை கூட்ட தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிர்வாகத் திறன் இருந்திருந்தால் நஷ்டத்திலிருந்து மீட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், […]

Categories
அரசியல்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை..4 ஆண்டுகளாக தொடர் சாதனை….அமைச்சர் விஜய பாஸ்கர்…!!!

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் தமிழகத்துக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளாக விருது அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இறந்தவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம்  தொடங்கப்பட்ட நாளிலிருந்து மொத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறந்த தலைவர்” எம்ஜிஆரா ? கலைஞரா ? சட்ட பேரவையில் காரசார விவாதம்…!!

சிறந்த அரசியல் தலைவர் கலைஞரா ? எம்ஜிஆரா ? என்பது    குறித்து சட்டப்பேரவை  கூட்டத் தொடரில் காரசார விவாதம் நடைபெற்றது.  தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், உங்கள் தலைவர் எம்ஜிஆர்க்கு தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் தான் என்றும், எனவே உங்களுக்கும் எங்களுக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் தீடிர் மாற்றம் …….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆசுரத்தனமான  பெற்று , மத்தியில் தனி பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக தேர்வாகியதால் பாஜவிற்கு செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார். ஜே.பி நட்டா தேர்வானத்தில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு அரவேக்காடு தனமாக உள்ளது…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது அரவேக்காடு தனமாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு பாராட்டுக்களையும்,  எதிர்ப்புகளையும்  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யாவின் பேச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பார்” அர்ஜுன் சம்பத் பேட்டி….!!

காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பர் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினியை யாரும் இழுக்க முடியாது. அவர் மிக தெளிவாக சொல்லி இருக்கிறாரார். வரக்கூடிய தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் நிச்சயம் இருக்கும். அவர் தேர்தலில் போட்டியிட போகிறாரார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் முதலைமைச்சராக ஸ்டாலினா ? ரஜினியா ? என்று தான் வர போகின்றது. தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி வந்தால் ராஜராஜ சோழன் ஆட்சி” அர்ஜுன் சம்பத் கருத்து….!!

ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல்  கொள்கை சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக அரசியலையும் , ராஜராஜ சோழனுடைய  ஆன்மீக அரசியலை கொண்டது. ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும். ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது , நீதி ,நேர்மை , தர்மத்திற்கு உட்பட்டது தான் ராஜராஜ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்” முதல்வர் குமாரசாமி நம்பிக்கை …!!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலவர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகின்றது. அங்கு ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA_க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து , பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருவதால்  முதல்வர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து  சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெருங்குளத்தூரில் 8 வழி சாலை…. பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

பெருங்குளத்தூரில் 8 வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்  கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா கிழக்கு-மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க கோரி வலியுறுத்தியதோடு, மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் முன்வைத்தார். இதற்கு பதில் அளித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி காப்பாற்றப்படுமா?கவிழுமா? 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. தற்போது ஆளும் அரசை கவிழ்க்க   பாஜக சதி செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து ஜூலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” தேர்தல் ஆணையத்திற்கு 3 மாத கால அவகாசம்…!!

தமிழக தேர்தல் ஆணையத்திற்கு  உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை ரத்து செய்யக்கோரியதோடு, 6 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஆனால் தற்போது வரை தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது  பலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா விளம்பரம் தேடுகிறாரா..? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!!

நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய […]

Categories
மாநில செய்திகள்

”சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகின்றது” H ராஜா கண்டனம்…!!

நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 % இடத்தில் போட்டியின்றி தேர்வு…!!

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழில் தேர்வு எழுதுவது தொடர்பாக “மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்”- அமைச்சர் வேலுமணி..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்  தபால் துறையில்  மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தபால்துறை தேர்வுகளில் முதல்தாள்  இனி அனைத்து மாநிலங்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இரண்டாம் தாள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்.?

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 10 நாட்கள் ஆன பிறகும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கபடவில்லை.முகுல் வாஸ்னிக்,மல்லிகார்ஜுன கார்கே முதல் சச்சின் பைலட் உள்ளிட்ட இளம் தலைவர்கள் வரை அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குலாம்நபி ஆசாத் ,அகமது பட்டேல் ,முகுல் வாஸ்னிக்,ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தபால்துறை தேர்வு தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்” அமைச்சர் கருப்பணன்..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்  மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இனி  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும்,  இந்த இரண்டு மொழிகள் தவிர  தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும்,  அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழையபடி 23 மொழிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும்” மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி..!!

இனிமேல் இந்தி,ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்  மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில்  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இந்த இரண்டு மொழிகள் தவிர இனி தமிழ் உட்பட வேறு மொழிகளில்  வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது. அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவை மூடுகிறது – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவை மத்திய அரசு மூடுகிறது என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு,  தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த சுற்றறிக்கை  போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா MLA”காங்கிரஸோடு இணைவது உறுதி….அமைச்சர் சிவக்குமார் பேட்டி …!!

கர்நாடகாவில் ராஜினாமா செய்த MLA நாகராஜன் மீண்டும் காங்கிரஸ்க்கு வர உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளிலிருந்து  16 MLAக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது குறித்து  கர்நாடக மாநில மழை கால கூட்டத் தொடரில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டால் ஆட்சி தானாகவே கவிழ்ந்து […]

Categories
அரசியல்

தமிழ் தொன்மையை அழிக்க சதி…. ஸ்டாலின் குற்றசாட்டு..!!

தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர்   ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர்  ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின்  உரிமைகளை  பறிக்கவும்  சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வைகோ …..!!

சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , […]

Categories
மாநில செய்திகள்

சிறந்த நெசவாளர்களுக்கு பரிசுத் தொகை… அமைச்சர் O.S.மணியன்…!!

சிறந்த பட்டுகளை  வடிவமைக்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் O.S.மணியன் தெரிவித்துள்ளார். சட்ட பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற  சட்ட பேரவைக் கூட்டத்த தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அமைச்சர் O.S.மணியன்  புதிதாக சில  அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில்,மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி இயந்திரங்கள்  5,56,000 ரூபாய் மதிப்பில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாநில செய்திகள்

சுற்றுலா தலமாக மாறும் பிரபல கடற்கரை…பேரவையில் அமைச்சர் பேச்சு..!!

சீர்காழி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய  கொடியம்பாளையம் கடற்கரை தீவை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு  நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பிச்சாவரம் அருகே தீவு போன்று காட்சியளிக்கும் கொடியம்பாளையம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில்  சீர்காழி தொகுதி MLA  கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளையம் கடற்கரை தீவானது, […]

Categories
சென்னை மாநில செய்திகள் வேலூர்

மாலை அலங்காரங்களுடன் புறப்பட்டது தண்ணீர் எக்ஸ்பிரஸ்…!!

 ஜோலார்பேட்டையிலிருந்து  50 வேகனில்  தண்ணீர்  நிரப்பப்பட்ட   ரயில் மாலை அலங்காரங்களுடன்  சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்  தட்டுப்பாட்டை போக்கும் விதமாக  ஜோலார்பேட்டையிலிருந்து    ரயில் மூலம் தண்ணீர்  கொண்டு செல்ல  ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு  அதற்கான பணிகள் விரைவாக  நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில்  தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர்  நிரப்பும் பணிகள்  நடைபெற்றன. இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து  அலங்காரங்களுடன்  ரயில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவன்” கர்நாடக சபாநாயகர் பேட்டி…!!

மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து  கர்நாடக அதிருப்தி MLA_க்கள் சபாநாயகரை சந்தித்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சபாநாயகர்  ரமேஷ்குமார் கூறுகையில் , ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் , ராஜினாமா குறித்து விளக்கம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மிரட்டலால் மும்பை சென்றதாக MLA_க்கள் சொன்னார்கள்” கர்நாடக சபாநாயகர் தகவல்…!!

சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 MLA_க்கள் என்னிடம் கூறினார்கள் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த  சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்  முன்பு அங்குள்ள 10 சட்டமன்ற உறுப்பினர் ஆஜராகி அதில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதை தொடர்ந்து அதிருப்தி MLA_க்கள் சந்திப்புக்கு பின்பு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்குள்ளது. யாரையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் ராஜினாமா செய்யமாட்டேன்” முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்…!!

அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் நான் ராஜினாமா செய்ய வேண்டுமா அதற்க்கு என்ன தேவை இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் தொடர்ந்து நிலவிவரும் சிக்கல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன , இந்த ஆட்சியை தக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசித்ததாக தெரிகின்றது. அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் இந்த கூட்டம் கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

“ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர்” கனிமொழி MP கோரிக்கை …!!

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டுமென்று மக்களவையில் திமுக MP கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த கூட்டத்தில்  உரையாற்றிய தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக M.P கனிமொழி , மத்திய அரசின் எல்லா திட்டங்களும் , எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரியும் படி  பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ,  தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு குறைவு  என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன்…வைகோ பேட்டி..!!

மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான், சந்திரசேகர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட  சண்முகம்,வில்சன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 3 பேர் என மொத்தம் 6 பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எங்களது ஆட்சி கலைக்கப்படாது…. குமாரசாமி நம்பிக்கை…!!

எங்களது ஆட்சி கலைக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்- ஜனதா தள  அதிருப்த்தி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஜனதா தள-காங் கட்சிகள் தீவீர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 MLAக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளோம் என சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் ஆட்சி காப்பாற்றப்படுமா?இல்லை கவிழுமா […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் ….!!

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவதால் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து திமுக  சார்பில் வைகோ , சண்முகம் , வில்சன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர். அதே போல அதிமுக சார்பில் முகமது ஜான் , சந்திரசேகர்  , அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர்.  இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“மத்திய அரசின் திட்டத்தில் தமிழாக்கம்” கனிமொழி MP கேள்வி …!!

 மத்திய அரசின் திட்டம் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் “பிரதம மந்திரி” என்று அடங்கிய பெயர்களை  வைத்து திட்டங்களை செயல்படுத்துகின்றது. இது குறித்து இன்று நடைபெற்ற மக்களவையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் , எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே மத்திய அரசு பெயர் வைக்கிறது. தூத்துக்குடியில் ‘PM Sadak Yojana’ என ஒரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு அறிவுரை வழங்க முடியாது…நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயர் வழக்கு..!!

MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில MLAக்கள் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 பேரின் கடிதங்கள் சட்ட விதிமுறைகளின் படி இல்லை என்றும், ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி கடிதம் அளிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து MLAக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,MLAக்கள் 10 […]

Categories

Tech |