Categories
அரசியல் தேசிய செய்திகள்

”குமாரசாமியின் ராஜினாமா ஏற்பு” கர்நாடக ஆளுநர் அறிவிப்பு ….!!

கர்நாடகாவின் குமாரசாமி அரசு கவிழந்த நிலையில் அவரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்பதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி கடந்த 2 வார பரபரப்புக்கு பின் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு  99 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாகவும் , 106 சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவிழ்ந்தது குமாரசாமி அரசு” ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் எடியூரப்பா..!!

கர்நாடகாவில் குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததைடுத்து எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து  ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7: 15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு  99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” குமாரசாமி உருக்கம்..!!

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேரவையில் குமாரசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார்  கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்து. இதையடுத்து சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானம் கடந்த வியாழன் கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய குமாரசாமி, நான் முதல்வராக […]

Categories
தேசிய செய்திகள்

செக்ஸ் வீடியோ வெளியிட்டது ”எனது கட்சியினர் தான்” பாஜக MLA குற்றச்சாட்டு ..!!

தன்னை தொடர்புபடுத்திய ஆபாச வீடியோ வெளியிட்டதுக்கு என்னுடைய கட்சிகாரர்கள் தான் காரணம் என்று பாஜக MLA குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , பெங்களுர் மகாதேவாபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பாவனி. ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நேற்று நடைபெற்ற   கர்நாடகா மாநில சட்டசபையில் அரவிந்த் லிம்பாவனி கதறி அழுதார். என்னை தொடர்புபடுத்தி, எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் அடுத்த அதிபர் யார் ? தேர்தல் தேதி அறிவிப்பு..!!

இலங்கையின் அடுத்த அதிபருக்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா, ராஜபக்சேவைத் தோல்வியடைச் செய்து இலங்கையின் அதிபரானார். இந்நிலையில் மைத்ரிபாலா சிறிசேனா பதவிக்காலமானது நிறைவடைய இருப்பதால்  இலங்கையின் தலைமைத் தேர்தல் ஆணையரான மகிந்தா தேசபிரியா புதிய அதிபருக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இவர் தேர்தல் நடத்தும் தேதியை பற்றி அதிபர்,சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு கலந்து பேசியப்  பின்னரே நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை  அதிபர்  தேர்தலானது  நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி  மாற்றுவதற்கு அதிபருக்கு கையில் தான் அதிகாரம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. .

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாச பேச்சு” காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய கோரி பாஜகவினர் சாலை மறியல்..!!

சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென  பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த  பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும்  இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் சிலை திறப்பு விழா… அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பு..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை  நேரில் சந்தித்த  மு.க ஸ்டாலின் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை  முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின்  உருவ சிலையானது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று  திறக்கப்பட உள்ளது.  இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை  சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே  சென்று  மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்றார். இதையடுத்து உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் […]

Categories
தேசிய செய்திகள்

”வேலைவாய்ப்பில் ஆந்திரா மக்களுக்கே முன்னுரிமை” அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி…..!!

ஆந்திர மாநிலத்திலே உள்ள தனியார் நிறுவங்களில் 75 சதவீத பணி இடங்களை உள்ளூர்  மக்களுக்கே வழங்க வேண்டுமென்ற மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் YSR காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம்” முக.ஸ்டாலின் வேண்டுகோள் …!!

மக்களவை தேர்தலில் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]

Categories
மாநில செய்திகள்

வேலூர் மக்களவையில் “ரூ 2 , 38,00,000 பறிமுதல் ” சத்யபிரத சாகு தகவல் …!!

வேலூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ 2 , 38,00,000பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் […]

Categories
மாநில செய்திகள்

சூர்யாவின் கருத்தை “ஆதரிக்கிறேன்,வரவேற்கின்றேன்” திருநாவுக்கரசர் MP …!!

சூர்யாவின் கருத்தை நான் ஆதரித்து , வரவேற்கின்றேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா  நடத்தும் அகரம்  அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , படிப்பை பாதியில் […]

Categories
மாநில செய்திகள்

8 வழி சாலை “யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்” முதல்வர் உறுதி …!!

8 வழி சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என்று முதல்வர் தெரிவித்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சேலம் முதல் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அரசாங்கம் பொதுமக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தியது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அரசு கைது செய்து , போராட்டத்தை ஒடுக்கியது. மேலும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் , இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“8வழி சாலை”மத்திய அரசின் நிலைப்பாடு என்ன..?உச்சநீதிமன்றம் கேள்வி..!!

8  வழி சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் சேலம் to சென்னை எட்டு வழி சாலை அதிவேக சாலை என சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 8 வழி சாலை அமைக்க மனமுவந்து நிலங்களை அளிக்குமாறு அவர் தெரிவித்தார். ஆனால் 8 வழிச்சாலைக்கு  தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு” அவசரமா விசாரிக்க முடியாது, நாளை பார்க்கலாம்… மனுவை மறுத்த உச்சநீதிமன்றம்..!!

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி கர்நாடகா சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் திடீரென ராஜினாமா செய்தது ஆளும் குமாரசாமி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். ஆனால் ஜூலை 18 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதங்கள் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா…. ரஜினிகாந்த் ஆதரவு

மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா என்று சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் அகோரம் அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகின்றார்.அகரம் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய சூர்யா புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதற்க்கு ஆளும் அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் நடிகர் சூர்யா வின் கருத்துக்கு பல்வேறு மக்கள் ஆதரவும் […]

Categories
மாநில செய்திகள்

இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோம் -எஸ் பி வேலுமணி.!!

இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோமாக என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்  பருவமழை பொய்த்ததால் சமீபத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் மக்கள் தெருத்தெருவாக காலிகுடங்களுடன் அலைந்தனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டும் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

இனி தண்ணீர் பஞ்சம் வராது ….. புதிய திட்டத்தை முன்மொழிந்த முதலவர் …..!!

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க புதிதாக திட்டம் உருவாக்கியுள்ளதாக முதலவர் தெரிவித்துள்ளார். தமிழக்கத்தில் அண்மைக் காலமாக தொடர்ந்து வந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க இனி வரும் காலங்களில் இது போல் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏரி மற்றும் குளங்களை தூர்வார ரூ 1, 250 கோடியில் நீர் மேலாண்மை இயக்கம் திட்டம்  தொடங்கப்படும் என்று கூறினார். நேற்றைய தின சட்டசபையில் முதலவர் பழனிசாமி விதி எண் 110-ன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குதிரை பேரம்”கர்நாடகா,கோவாவை தொடர்ந்து மே.வங்கத்திலும் பாஜக சீட்டிங்… மம்தா பேனர்ஜி குற்றசாட்டு…!!

கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை  பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி  பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

கலைஞரோ..ஜெயலலிதாவோ.. முதல்வராக இருந்திருந்தால் நீட் வந்திருக்காது…. ஸ்டாலின் அசத்தல் பேச்சு..!!

ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை.. நடிகர் அஜித்தே சாட்சி.! அமைச்சர் ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்..!!

திமுக ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரம்  இல்லை என்றும் அதற்கு உதாரணம் நடிகர் அஜித் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீது அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதாக அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]

Categories
மாநில செய்திகள்

கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக டி. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் டி. ராஜா அகில இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி” பொதுச் செயலாளர் து.ராஜா குற்றச்சாட்டு..!!

பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா தெரிவித்துள்ளார்.   இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்வு..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்  தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் தைரியம் யாருக்கும் இல்லை… சீமான் பரபரப்பு பேட்டி..!!

நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இவரது விமர்சனம் பலர் மத்தியில் பாராட்டுகளையும்   விமர்சனங்களையும்  பெற்று சர்ச்சைக்குரிய கருத்தாக மாறியது. தொடர்ந்து பேசப்பட்டு விவாதப் பொருளாக மாறிய இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் நோக்கத்தோடு எந்த […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்… “அத்திவரதரை” இடம் மாற்ற நடவடிக்கை…முதல்வர் பேட்டி ..!!

பக்தர்களின் தரிசன வசதிக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே  வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர நாட்டில் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை….எஸ்.ஏ. சந்திரசேகர்

சுதந்திர நாட்டில் இருக்கிறோம் ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. காலை முதலே இயக்குனர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து உற்சாகமுடன் வாக்களித்து  செல்கின்றனர். வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்த நடிகர் விஜயின் தந்தையும் , இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு , பதிலளித்த இயக்குனர் எஸ்.ஏ. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அணை பாதுகாப்பு மசோதா… எதிர் குரல் அதிமுக MPக்கள் மூலம் ஒலிக்கும்… முதல்வர் பேட்டி…!!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து  அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு க ஸ்டாலின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக குறைகளை புட்டு புட்டு வைத்த மக்கள்… மனம் நெகிழ ஸ்டாலின் நன்றி… வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!

திமுக மீதி நம்பிக்கை கொண்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் நெகிழ பதிவிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக்கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது மக்கள் தங்கள் மீது வைத்திருந்த இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் விதமாக அதிமுக அரசின் குறைகளை கண்டறியவும் திமுகவின் நிறைகளை தெரிந்து கொள்ளவும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் ஏற்காததை திமுகவும் ஏற்காது… கனிமொழி பரபரப்பு பேட்டி…!!

மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது என திமுக MP கனிமொழி தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி  மசோதா நிறைவேற்றப்பட்டது.  மேலும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2023 க்குள் குடிசையில்லா தமிழகம்… பேரவையில் OPS அறிவிப்பு…!!

2023க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கடந்த 8 ஆண்டுகளில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியம் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை பணம் ”ரூ 10,000_ஆக உயர்வு” துணை முதலவர் அறிவிப்பு …!!

அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5000_த்திலிருந்து ரூ. 10,000_ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தின பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று  சட்டசபையில் துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஓய்வூதியர்களுக்கு 2000 ரூபாயில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு..!!

அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக து.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி பேசப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“7பேர் விடுதலை” மு.க.ஸ்டாலின் கேள்வியும்… OPSஇன் பதிலும்…!!

தமிழகத்தில் 7 பேர் விடுதலை குறித்து பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டநாள்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலை தமிழக ஆளுநரின் ஒற்றை கையெழுத்திற்க்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் கடத்துவதன் காரணமாக எதிர்க்கட்சிகள் சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றமும் இவ்விவகாரத்தை பொறுத்த வரையில் ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று  கைவிரித்துவிட்டது. இந்நிலையில் இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள்… பேரவையில் முதல்வர் அறிவிப்பு…!!

இனி வருடந்தோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்  என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன சட்ட மானியக்கோரிக்கை விவாதங்களின் முடிவில் இறந்தோரும் விதி 110இன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வந்தார் அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், தமிழகத்தில் நீர் மேலாண்மை, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை… மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே திமுகவின்  நிலைப்பாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில்  பேசிய, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்த அவர், அதற்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அஸ்ஸாம் மொழியில் திருக்குறள்…. பேரவையில் முதல்வர் அறிவிப்பு…!!

அஸ்ஸாம் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பநல நிதி 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும். ரேஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்…. பேரவையில் ஸ்டாலின் அதிரடி..!!

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு  மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தியாகராஜ பாகவதருக்கு ரூ50,00,000த்தில் மணிமண்டபம்….பேரவையில் முதல்வர் பேச்சு..!!

திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ50 லட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிருப்தி MLA_க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் …..!!

அதிருப்தி MLA_க்கள் வர வேண்டுமென்று கட்டாயப்படத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. மேலும் அனைத்து அதிருப்தி உறுப்பினர்களும் பங்கேற்காமல் வாக்கெடுப்ப்பு நடத்த முடியாது என்று கூறி கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவர்னர் உத்தரவை எதிர்த்து முதல்வர் குமாரசாமி மேல்முறையீடு …..!!

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்த அம்மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து முதலவர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”இரவு 12 மணி ஆனாலும் விவாதத்தை முடியுங்கள் ” எடியூரப்பா கோரிக்கை …!!

இரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் என்று கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடக சட்டசபை ஒத்திவைப்பு” சபாநாயகர் அதிரடி உத்தரவு ….!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை வருகின்ற திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர்  ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு”சபாநாயகர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்…. பேரவையில் குமாரசாமி வேண்டுகோள்…!!

கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் சரியான முடிவெடுத்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர்  ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆளுகின்ற அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகையால் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சபாநாயகரை உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுநர் எனக்கு உத்தரவிட முடியாது” கர்நாடக சபாநாயகர் அதிரடி ….!!

ஆளுநர் எனக்கு உத்தரவிட முடியாது என்று கர்நாடக மாநில சபாநாயகர்  கே.ஆர்.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான  நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் பங்கேற்க எதிர்க்கட்சியான பாஜகவை சேர்ந்த 105 MLA_க்களும் சட்டசபைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தம்” கலக்கத்தில் திமுகவினர் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜியை எச்சரித்த சபாநாயகர் ….!!

சட்டசபையின் மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தில்  எதிர்க்கட்சி தலைவரான முக.ஸ்டாலின் உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கும் போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டார். அப்போது செந்தில் பாலாஜி எழுந்து நின்று கைகளை நீட்டி பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பாகிய துணை முதலவர் ஓ.பன்னீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்” அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  கூறுகையில் , இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் தேசிய எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை தமிழகம் ஏற்கக்கூடாது  என்று தெரிவித்தார். இதற்க்கு பதிலளித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெளிநாடு சென்ற போது பல விஷயங்கள் நடந்துள்ளது…. முதல்வர் குமாரசாமி …!!

நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் தற்போது உச்சக் கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு தன்னுடைய ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது நாளாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் கர்நாடக மாநில சட்டசபையில் நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய மாநில முதல்வர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவர்னர் மூலம் நெருக்கடி கொடுக்கும் பாஜக” கர்நாடக அமைச்சர் குற்றசாட்டு …!!

கவர்னர் மூலமாக அரசுக்கு பா.ஜனதாவினர் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று அமைச்சர்  டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அரசின் பெரும்பான்மையை இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நீருபித்துக் காட்ட வேண்டுமென்று கர்நாடக ஆளுநர் வஜூபாய் கெடு விதித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் , முதலவர்  குமாரசாமி மதியம் 1.30 மணிக்குள் அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டுமென்று கவர்னர் வஜூபாய் உத்தரவிட்டுள்ளார்.  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிக்கலில் குமாரசாமி “மதியம் 1.30 தான் கெடு” மாறப்போகும் கர்நாடக அரசு …!!

இன்று மதியம் 1.30_க்குள் கர்நாடக முதலவர் குமாரசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான  நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு […]

Categories

Tech |