Categories
மாநில செய்திகள்

”அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது” கனிமொழி எம்.பி ட்வீட் …!!

 மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்  தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள்  எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன் இந்த மசோதாவை நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர். மேலும் முத்தலாக் தடை சட்ட  விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக , பகுஜன் சமாஜ், ஐக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

முத்தலாக் தடை மசோதா பாலின சமத்துவத்திற்கான மைல்கல்…. குடியரசுத்தலைவர் கருத்து..!!

ஆன், பெண் பாலின சமத்துவத்திற்கான பயணத்திற்கு முத்தலாக் தடை மசோதா  மைல்கல்லாக அமையும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.   இதற்கு எதிர் கட்சி சார்பில் இருந்து தீவிர எதிர்ப்பு எழுந்ததை அடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயன்பாட்டில் “நாப்கின்” எரிக்கும் இயந்திரம் … பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ..!!

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்முதலாக சானிடரி நாப்கின்  எரிக்கும் மின்இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், மாணவிகள் மட்டும் சுமார் 150 பேர் பயிலுகின்றனர். இதனால் மாணவிகள் நலனுக்காக தமிழக அரசு சுகாதாரத் துறையின் மூலமாக பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கி வருகிறது. இதற்குமுன் அதனை பயன்படுத்திய பின் அந்த நாப்கின்களை அளிப்பதற்கான சாதனங்கள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் , […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்… வெங்கையா நாயுடு அறிவிப்பு..!!

மாநிலங்களவையில் நடத்தப்பட்ட  வாக்கெடுப்புக்கு பின் முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேறியதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு  அறிவித்தார்.  பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.  இந்நிலையில் முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பலாமா வேண்டாமா? என்பது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”என் வீட்டின் முன் நின்று அழைத்தார்கள்” இனி அரசியலுக்கு வரமாட்டேன்…. தீபா பேட்டி

என் வீட்டின் முன் நின்று அழைத்தால் நான் அரசியலுக்கு வந்தேன்.  இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. அதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும்  திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி அதனை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தீபா, முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இனி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்போம் …. உதயநிதி ஸ்டாலின்

வேலூர் தேர்தல் வெற்றியை  தலைவர் கலைஞரின் காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி வெற்றியை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வைத்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய உதயநிதி, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள் வாக்கு இயந்திரத்தில் முதல் சின்னம் நம்முடைய உதயசூரியன், முதல் வேட்பாளர் பெயர் கதிர் ஆனந்த். ஆகஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக வேட்பாளருக்கு பாடம் புகட்டடுங்கள்” G.K வாசன் வேண்டுகோள் …!!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசிய அவர் , வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த திமுக வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக சுட்டிக்காட்டினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

A.C சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் ….!!

வேலூர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , கே. பி அன்பழகன் , காமராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மக்கள் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளராக களமிறங்குகின்றார். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம் …. திமுக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம் ….!!

உன்னாவ் விவகாரம் தொடர்பாக  திமுக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையே சிறுமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

“தடையை நீக்க கோரிக்கை” ஆறுமுக சாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

”சப்பாத்தி இல்லை என்றால் முத்தலாக்” சட்டத்துறை அமைச்சர் வேதனை …!!

உண்பதற்கு சப்பாத்தி இல்லாமல் தீர்ந்துவிட்டால் இப்படி காரணமின்றி விவகாரத்து  நடைபெறுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  வேதனை தெரிவித்தார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் , முத்தலாக் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் 574 பெண்கள்  […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் ….!!

முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் , இந்த மசோதா பாலின நீதி , சமத்துவம் , கண்ணியம் தொடர்பானது  என […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த வாரம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்” புதிய தலைவர் பிரியங்கா காந்தி.?

காங்கிரஸ் கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என அடுத்த வாரம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதற்காக அவர் கடந்த மே 25-ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை அளித்து  விட்ட நிலையில் கட்சிக்கு அடுத்த  தலைவர் யார் என்ற குழப்பம் 2  மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”என்னை அரசியலுக்கு அழைக்காதீங்க” போலீசில் புகார் கொடுப்பேன்…. ஜெ.தீபா அதிரடி

என்னை யாரும் அரசியலுக்கு அழைக்காதீங்க ,  நான் அரசியலில் இருந்து விலகுகின்றேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விருப்பமொழியாக “தமிழ்”… பேரவையில் அதிமுக MP வலியுறுத்தல்..!!

இந்தியா முழுவதும் தமிழை விருப்ப மொழியாக அறிவிக்க வேண்டுமென அதிமுக MP கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்பால் ரெட்டி_க்கு இரங்கல் தீர்மானம்….. கண்ணீர் விட்டு அழுத்த வெங்கையா நாயுடு …!!

மறைந்த ஜெய்பால் ரெட்டி மறைவு மீதான இரங்கல் தீர்மானத்தில்  வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதது மாநிலங்களவையை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மறைந்த ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வாசித்த வெங்கையா நாயுடு, ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த நட்பு குறித்த நினைவுகளை வெளிப்படுத்தினார். மேலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த 40 ஆண்டுகால நட்பு , அரசியல் பழக்கம் குறித்து வெங்கையா நாயுடு பேசிய போது ,  1980_ஆம் ஆண்டு காலங்களில் ஆந்திர […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் கட்சி தலைவராக பிரியங்கா” காங்கிரஸ் முதல்வர் வேண்டுகோள் …!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வாக இருக்கும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகினார் ..!!!

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகியதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது . கர்நாடகாவில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பாஜக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார் .இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பாண்மையை நிரூபித்தார் . நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியது .இதனால் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தானே முன்வந்து   பதவி விலகியதாக தெரிகிறது .

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலைக்காக திருமாவளவன் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்..!!  

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசயிருக்கிறார்.   முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு பாரட்டுக்குரியது… காங்கிரஸ் MP புகழாரம்..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வரவேற்கத்தக்கது என்று விருதுநகர் MP  மாணிக்கம் தாகூர் தெரிவித்தார் . நடிகர் சூர்யா  நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்… சபாநாயகர் ரமேஷ் அதிரடி..!!

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்  கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தது.  இதையடுத்து குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்த பின், கர்நாடக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா நாளை நடைபெறும் கர்நாடக சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
தேசிய செய்திகள்

4-ஆவது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் எடியூரப்பா… பாஜகவினர் கொண்டாட்டம்..!!

4-ஆவது முறை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார்   கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு  தோல்வியடைந்து கவிழ்ந்ததால் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 105 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியான  பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிகளை செய்து வந்தது. அதை தொடர்ந்து கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ அகில இந்திய இடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீடு…. திமுக MP கவலை …!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு தராதது குறித்து திமுக MP வில்சன் கவலை தெரிவித்தார். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் மாநிலங்களுக்கும் 25 %  இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவது குறித்து முறையிட்டார். அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்களில் தரும் இடங்களில் மத்திய அரசு 25 % இட ஒதுக்கீட்டை பின்பற்றப்படுவதில்லை. எனவே அகில இந்திய தொகுப்பில் வரும் மருத்துவ இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் இட ஒதிக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆகவே ஒவ்வொரு மாநிலமும் இட ஒதுக்கீடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எச்சரிக்கை “மக்கள் புரட்சி வெடிக்கும்” கர்ஜித்த வைகோ ……!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

105 MLA_க்களை வைத்து “பா.ஜ.க எப்படி பெரும்பான்மை நிருபிக்கும்” சித்தராமையா ட்வீட் ..!!

105 எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சி அமைக்கும் பா.ஜ.க எப்படி பெரும்பான்மையை நிருபிக்க முடியும்? என்று  சித்தராமையா ட்வீட் செய்துள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்  மற்றும் தசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமி தந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசை அமைக்கும் முயற்சியில் எதிர் கட்சியாக இருந்த பாஜகவினர் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் இன்று கர்நாடக மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை பட்டியலிட்டு வைகோ பேச்சு …..!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார். சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவையின் MP ஆகியுள்ள வைகோ நேற்று MP_ஆக பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற புலி என வர்ணிக்கப்படும் வைகோ நேற்று முதல் நாளே பல்வேறு கேள்விகளை எழுப்பி அசத்தினார். இந்நிலையில் , இன்று நடைபெற்று மாநிலங்களவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று , இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காவேரி வடிநிலை மாவட்டங்களை பாலைவனமாகிவிடும் என்று […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அய்ய்யாக்கண்ணு படுத்து புரண்டு போராட்டம்” திருச்சியில் பரபரப்பு …!!

விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேலூர் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு போராட்டத்தில் ஈடுபட்டார். விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  டெல்லிலியில் உள்ள சந்தர் மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர்  அய்யாக்கண்னு. ஆனால் இவர் தொடர்ந்து  போராட்டங்களை நடத்தியும்  பலனும் இல்லை. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை நடத்தக் கூடாது என்று படுத்து புரண்டு அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மக்களவைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அவசர அவசரமாக பதவியேற்பு” மாலை 6.30 மணிக்கு எடியூரப்பா முதல்வராகிறார்…!!

இன்று நான்காவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க இருக்கின்றார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிறிது நேரத்துக்கு முன்பாக அவசரஅவசரமாக சென்று எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் பிறகு அந்த பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12 30 மணிக்கு  நடை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாலை 6.30 மணிக்கு  ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதில் முதல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அவசரஅவசரமாக ஆளுநரை சந்திக்கும் எடியூரப்பா” ஆட்சியமைக்க உரிமை கோருகின்றார் …!!

ஆட்சியமைக்க உரிமை கோரி எடியூரப்பா அவசரஅவசரமாக ஆளுநரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் களத்தில் அதிரடி திருப்பமாக அவசர அவசரமாக எடியூரப்பா ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநரை சென்று சந்திப்பார் என்று தகவல் கூட 20 நிமிடங்களுக்கு முன்பாக தான் வெளியிடப்பட்டது.எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எடியூரப்பா அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார். ஆளுநரை சந்தித்து  கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள தங்களுக்கு முழு பெரும்பான்மை இருக்கிறது எனவே ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் எடியூரப்பா கொடுத்திருக்கிறார். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல்” முதல்வர் பழனிசாமி 27-ஆம் தேதி முதல் பிரச்சாரம்..!!

வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.  வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி  சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் 15ஆம் தேதி திமுக பிரமுகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.   இந்நிலையில் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவை விமர்சிக்க தயக்கம் கிடையாது” அதிமுக_வின் மைத்ரேயன் பேட்டி …!!

திமுகவை  விமர்சிக்க  எனக்கு தயக்கம் கிடையாது என்று அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தனது பதவி காலம் முடிந்த நிலையில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியை வணங்க வந்தீருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் , மு க ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவிற்கு வர வேண்டும் என்று கூறியதற்காக பதிலை  எங்களுடைய தலைமை சொல்ல வேண்டும. அதிமுகவில் உள்ள   கட்சிக்கு தலைமை , ஆட்சிக்குத் தலைமை இரண்டுமே ஒன்று சேர பயணிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல்” சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு.!!

வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதற்கிடையே வேலூர் தொகுதியில் 28 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஏவி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”அதிருப்தி MLA_க்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன்” கர்நாடக சபாநாயகர் உறுதி …!!

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்று கர்நாடக மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜக புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்கவேண்டுமென்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கொறடா உத்தரவை மீறியவர்கள் தகுதி நீக்கம்” சபாநாயகரிடம் காங்கிராஸ் கோரிக்கை …!!

கர்நாடகாவில் கட்சி கொறடா உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”அதிருப்தி MLA ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” கர்நாடக பாஜக வேண்டுகோள் …!!

கர்நாடகாவில் அதிருப்தி MLA_க்களின் ராஜினாமாவை ஏற்கும் படி பாஜகவினர் சபாநாயகரை வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் குமாரசாமி அரசு கவிழ காரணமான அதிருப்தி MLA_க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் பரிசீலனையில் உள்ளதால் அந்த 15 பேரும் MLA _க்களாகவே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடக பாஜகவிற்கு புதிய சிக்கல்” தீராத கர்நாடக பரபரப்பு ……!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்த்தநிலையில் ஆட்சியமைக்க இருக்கும் பாஜக_விற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜனநாயகம் தோல்வி …. நேர்மை தோல்வி ….. கர்நாடக மக்கள் தோல்வி ….. ராகுல் ட்வீட் …!!

ஜனநாயகமும், நேர்மையும் தோற்று, கர்நாடக மக்களும் தோல்வியைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

நம்பர்-1, நம்பர்-2 சிக்னல் கொடுத்தால்…. ம.பி காங்கிரஸ் அரசு கவிழும்…. பாஜக தலைவர் பேட்டி …!!

 நம்பர்-1, நம்பர்-2 சிக்னல் கொடுத்தால் மத்திய பிரதேசம் காங்கிரஸ் அரசை 24 மணி நேரத்தில் கவிழ்ப்போம் என்று அம்மாநில பாஜக தலைவர்  கோபால் பார்கவா கூறியுள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணி தொடர்பாக குமாரசாமி கருத்து …..!!

கூட்டணி தொடர்பான எந்த விவகாரத்தையும் எங்களுடன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கர்நாடக காபத்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த  கர்நாடக  ஆளுநர் வஜூபாய் வாலா  புதிய அரசு அமையும் வரை குமாரசாமி  காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு நாளை என்ன நிகழ்ந்தால் இரங்கல் தீர்மானம் வேண்டாம் …. மைத்ரேயன் MP உருக்கம் …!!

நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று மைத்ரேயன் MP உருக்கமாக பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் இன்றைய மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி.  உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில் , இந்த நேரத்தில், என் மீது  மிகுந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“டெல்லி உத்தரவுக்காக காத்திருக்கின்றேன்” எடியூரப்பா பேட்டி …!!

டெல்லியில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்கின்றேன் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த  கர்நாடக  ஆளுநர் வஜூபாய் வாலா  புதிய அரசு அமையும் வரை குமாரசா காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். இந்நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பா தேர்வு ….!!

கர்நாடக மாநில  பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று  விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 7.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு  99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.   இதையடுத்து பாஜக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மோடியை தொடர்ந்து அத்வானியை சந்தித்த வைகோ …..!!

பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் வைகோ இன்று பாஜகவின் மூத்த தலைவர் அத்வனியை சந்தித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தின் திமுக கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் MP ஆகியுள்ள வைகோ நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவின் மூத்த தலைவர்  எல்.கே.அத்வானியை டெல்லியில் சந்தித்தார்.நாடாளுமன்ற புலி என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியை யாரும் திணிக்கவில்லை” தமிழிசை கருத்து …!!

இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக தேசிய புதிய கல்விகொளகை என்ற புதிய வரைவு கொண்டுவந்தது. மேலும் அனைத்து மாநிலங்களும் மூன்றாவதாக ஹிந்தி மொழியை விரும்ப பாடங்களாக படிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையே புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்தியது.இதற்க்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்” தமிழிசை வேண்டுகோள் …!!

தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் செல்கிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றன. தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளிள் அதிக கவனம் செலுத்தி , தமிழகத்தில் ஏற்படும் அசாதாரண சூழலை தடுக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதி சிலை திறப்பு” ரஜினி , கமலுக்கு திமுக அழைப்பு ….!!

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி , கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7_ஆம் தேதி  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரின் சிலை திறப்பு விழா நடைபெறுகின்றது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையத்தில் தலைவர்  கமலஹாசன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

A.C சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர்கள் பிரச்சாரம் …..!!

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் AC சண்முகத்திற்கு  ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் ….!!

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது” இனி மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்- தமிழிசை..!!

கர்நாடகவை  போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்  கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் குமாரசாமி.  கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள  நிலையில் பஞ்சாப், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பு” கட்சியை விட்டு நீக்கிய மாயாவதி …!!

கர்நாடக மாநில நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை அக்கட்சியின் தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்நிலையில் அங்குள்ள பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற  உறுப்பினர் […]

Categories

Tech |