மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது.அவருக்கு வயது 98. […]
